ஒரு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது எதிர்கட்சி என்ற வகையில் எமக்கு இருக்கும் உரிமை.
பிரேரணையை அவர் எதிர்கொண்டு தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கலாம் அல்லது பதவி விலகி விசாரணையை எதிர்கொண்டு மீளவும் அவர் நியமிக்கப்படலாம்.
கடந்த காலங்களில் பாக்கிர் மாக்கார் சபாநாயகர் எம் எச் முஹம்மட் ஆகியோருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை வந்துள்ளது. அப்போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ள இனவாதத்தை கையிலெடுக்கவில்லை.
ஆனால் இப்போது பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகி சிங்கள மக்களிடத்தில் இருந்து முழுமையாக பிரித்துவிட முயற்சிக்கின்றனர். இது பிழையான நடைமுறையாகும்.
2014 இல் செயல்பட்டதுபோன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எம்மோடு உள்ள நடுநிலை மக்களை பயங்கரவாதத்துக்குள் தள்ளி வாக்குகளை சூரையாட கடுமையாக முயற்சிக்கின்றனர்.
மேற்குலகின் சதித்திட்டத்தில் இந்த நாடு வீழ்ந்துள்ளது. ஈராக் சிரியா யேமன் போன்ற நாடுகளை போன்று எமது நாட்டையும் அழிக்க மேற்குலகம் திட்டம் தீட்டியுள்ளது. இதற்குள் முஸ்லிம் சமூகம் விழுந்துவிட வேண்டாமென நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் மீதான நம்பிக்கையை இல்லாமல் செய்து அந்நியப்படுத்தி தங்களது கட்சிகளை வாழவைக்க திட்டம் தீட்டுகின்றனர்.
இவை முறியடிக்கப்பட வேண்டும். இதிலிருந்து முஸ்லிம் சமூகத்தினை காப்பாற்ற வேண்டும் இதற்காக நடுநிலையாக சிந்திக்க கூடிய அனைத்து முஸ்லிம் மக்களையும் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கிறேன்.