காரைதீவு சகா-
இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்ட காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபம் நாளை (27.06.2019) வியாழக்கிழமை மு.ப 11.00 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.
பழமைகுன்றாது நவீனமாகப்புனரமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் அவதரித்த பூர்வீகவாசஸ்தலமும் நாளை(27) திறந்துவைக்கப்படவுள்ளது.மேலும் சுவாமி பிறந்த இல்லத்தின்முன் நிறுவப்பட்டுள்ள இருக்கைநிலையிலுள்ள சுவாமி விபுலாநந்தரின் சிலை திறந்துவைக்கப்படவுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள் சமுகமேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு இவற்றை திறந்துவைக்கிறார்.கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் கலந்துகொள்கிறார்.
இந்த இரண்டுமண்டபங்களும் பொதுமக்கள் பாவனைக்காகவும் பார்வையிடலுக்காகவும் மீளக் கையளிக்கும் வகையிலான
ஆரம்ப நிகழ்வு நாளை
காலை 11மணியளவில் நடைபெறவுள்ளது என இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
கூடவே அம்பாறைமாவட்டத்தில் பின்தங்கிய 45 இந்துஆலயங்களுக்கான உதவுதொகை வழங்கும் நிகழ்வும் நடந்தேறவுள்ளது.
அதேவேளை இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தின் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையத்தின் அம்பாறை மாவட்டக் கிளையினை ஆரம்பித்து வைத்தல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது எனவும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.