உலக நாடுகள் அனைத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இஸ்ரேலின் யமாம் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு மட்டுமே கட்டுப்படுவதால், குறித்த பொலிஸார் ஊடாக இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இரண்டு நாட்டு அரசாங்கங்களும் விரைவிலேயே விசேட கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இலங்கை மட்டுமன்றி, சர்வதேச ரீதியாகவும் பெரும் பரபரப்பை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு உலக நாடுகளும் இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளன.
இந்த நிலையிலேயே, தற்போது இஸ்ரேல் அரசாங்கமும் பாதுகாப்புக்கான செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேல் அரசாங்கத்தினால் இலங்கை இராணுவத்துக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.