பொஷன் தினத்தை முன்னிட்டு விகாரைக்கு நிதியுதவி


அப்துல்சலாம் யாசீம்-
பொஷன் தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகரிலுள்ள பிரபல விகாரையான ஐயசுமநாராம விகாரைக்கு இஸ்லாமிய வர்த்தக
நலன் புரி அமைப்பு நிதியுதவி வழங்கியுள்ளது.
திருகோணமலை இஸ்லாமிய வர்த்தக நலன் புரி அமைப்பின் உப தலைவர் நியாஸ் ஹாஜியார் தலைமையில் இந்நிதியுதவ
வழங்கப்பட்டுள்ளது.
இன ஒற்றுமையை மேலோங்கச்செய்யும் நோக்கில் பொஷன் தினத்தில் செலவிடப்படும் செலவீனங்களை குறைக்கும் நோக்கில் விகாரையின் விகாராதிபதி ஞான கீர்த்தி ஹிமியிடம் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இன ஒற்றுமையை மேலோங்கச் செய்ய வேண்டும். தமிழ் முஸ்லிம் சிங்களம் என வேறுபாடு இருக்கக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இஸ்லாமிய வர்த்தக நல அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை எதிர்காலத்தில் நவீன சமூகம் சார்ந்த வியாபார சங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதுடன் எதிர்காலத்தில் அவர் தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -