மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அபுஹின்ஸா-
மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் வழமைபோன்று இம்முறையும் நோன்புப்பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பாவும் இடம்பெற்றது.
அசாதாரண சூழ்நிலையிலிருந்து நாடு வழமைக்கு திரும்பியதன் பின்னர் முஸ்லிங்கள் அதிகமாக கூடும் நிகழ்வு என்பதால் சம்மாந்துறை பொலிஸ் இருவர் இன்றைய தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்றைய பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவில் கலந்து கொள்ள வழமைபோன்று சாய்ந்தமருது மாளிகைக்காடு பொதுமக்கள் ஆவலுடன் கலந்துகொண்டிருந்தனர்.
அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் ஏ.ஆர்.எம். சப்ராஸ் பெருநாள் தொழுகையையும் குத்பா உரையையும் நிகழ்த்தினார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
க.கிஷாந்தன்-
30 நாட்கள் நோன்பு இருந்து 05.06.2019 அன்று மூஸ்லீம்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடினர்.
அந்தவகையில் மலையகத்தில் மூஸ்லீம்கள் ரமழான் பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் கொண்டாடினார்கள்.
அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் பிரதான மௌலவி ஹஜூமல் தலைமையில் அட்டன் மூஸ்லீம் மக்கள் விசேட ரமழான் தொழுகையிலும், பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.
ஆனால் பண்டிகையை அட்டன் வாழ் மூஸ்லீம் மக்கள் இந்த முறை முழுமையான சந்தோஷத்துடன் கொண்டாடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மலையக பள்ளிவாசல்களில் விசேட பெருநாள் தொழுகை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தியாக திருநாளான நோம்பு பெருநாளினை உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்கள் இன்று மிக விமரசையாக கொண்டாடினர்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
முஸ்லிம் மக்களின் தியாக திருநாளாம் நோன்பு பெருநாளினை உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்கள் இன்று ( 05) மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடினர்.
இந்த நோம்பு பெருநாளினை முன்னிட்டு மலையகத்தில் உள்ள பல இஸ்லாம் பள்ளிவாசல்களில் விசேட பெருநாள் தொழுகை இடம்பெற்றன.
நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவதனால் இவ்வருடம் தொழுகைகள் மிக எளிமையாகவே நடைபெற்றன.
நோம்பு திருநாளினை யொட்டி ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் விசேட பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஐ.எம்.அச்சுமன் தலைமையில் இடம்பெற்றன.
இதன் போது கடந்த 21 திகதி குண்தாக்குதலில் உயிர் நீத்த சகோதர மக்களை நினைவு கூர்ந்து துவா பிரார்த்தனையொன்றும் இடம்பெற்றதுடன் நாட்டிலும் சமூகங்களுக்கிடையிலும் சாந்தி சமாதானம் நிலவ வேண்டுமென விசேட பிராத்தனையொன்றும் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து ஒருவருக்கு முசாபா செய்து பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெருநாள் தொழுகை.
எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் தொழுகை இம்முறை அப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் இன்று (5) இடம்பெற்றது.
ஜம்இய்யா ஏற்பாடு செய்த பிரதான தொழுகையானது மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் மௌலவி வீ.ரீ.எம்.முஸ்தபா தப்லீகி, செம்மண்ணோடை குபா பள்ளிவாசலில் மௌலவி ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, மாஞ்சோலை ஹிழ்ரியா பள்ளிவாசலில் எம்.முஸம்மில் சஹ்வி ஆகியோர்கள் தொழுகை நடாத்தி உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பெரியநீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பி.எம்.எம்.ஏ.காதர்-
புனித நோன்புப்பெருநாள் தொழுகை இன்று (05-06-2019) பெரியநீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.இங்கு கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.இதில் பெரும்தொகையான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
திருகோணமலை...
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பெரிய பள்ளிவாயலில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று காலை 6 45 மணிக்கு ஆரம்பமானது.
பெண்களுக்கான தொழுகை இன்று காலை 6.45 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு ஏழு மணியளவில் முடிவுற்றது.
பள்ளிவாயலுக்கு முன்னாள் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியதுடன் கிராம மக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் என். நஸார்தீன் மௌலவி அவர்களினால் பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது. மக்களுடன் எவ்வாறு தமது பெருநாளை கழிக்க வேண்டும். பட்டாசு கொளுத்தி வேடிக்கைகள் காட்டி மற்றைய மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு எமது பெருநாளை கொண்டாட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் அனைவரும் இன ஒற்றுமைக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட வேண்டும் எனவும், எமது உயிரிழந்த உறவுகளுக்காக வேண்டி நாங்கள் மையவாடிக்குச் சென்று துவா பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் நாட்டில் சமாதானம், சுபீட்சமான எதிர்காலம் மலர வேண்டும் எனவும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.