காலஞ்சென்ற தனது தந்தை நினைவாக தனயன் பிரபலமான வீதியொன்றுக்கு 3கண் LED மின்விளக்குகளைப்பொருத்தி ஒளியூட்டியுள்ளார்.
இச்சம்பவம் காரைதீவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
காரைதீவின் பிரபல சமுகசேவையாளர் சமாதானநீதிவான் பொ.ஸ்ரீஅருட்கடாட்சம் தனது தந்தையார் காலஞ்சென்ற ஆசிரியர் கந்தப்பன் பொன்னையாவின் ஞாபகார்த்தமாக விபுலமுனி விபுலாநந்தஅடிகளார் பிறந்த வீதிக்கு 3கண் LED தெருமின்விளக்குகளைப்பொருத்தி ஒளியூட்டியுள்ளார்.
அம்மின்விளக்குகளை அவர் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் வழங்கிவைத்தார். சபை ஊழியர்கள் அவற்றை விபுலாநந்தாவீதிச்சந்தி மற்றும் சுவாமிகள் பிறந்த இல்லம் மற்றும் மணிமண்டபம் முன்னாகவும் பொருத்தினர்.
இதனால் அப்பகுதி இரவில் ஜெகஜோதியாகக்காட்சியளிக்கின்றது.
'தமது சபையால் தமது காலத்தில் தெருமின்விளக்குகள் கணிசமானளவு பொருத்தப்பட்டுள்ளதாகவும் அண்மையில் 2கண் டநன மின்விளக்குகள் 20 சபை உறுப்பினர்கள் 12பேருக்கும் வழங்கப்பட்டுப் பொருத்தப்பட்டன. ஆனால் சமுகத்திடமிருந்து முதன்முறையாக இத்தகைய மின்விளக்குகள் சபைக்குக் கிடைக்கப்பெற்றமை இதுவே முதற்றடவையாகும். சமுகசேவையாளர் பொ.ஸ்ரீஅருட்கடாட்சம் 3கண்மின் விளக்குகளைத்தந்து முன்னுதாரணமாகவிளங்குகிறார் அவருக்கு நன்றிகள்' என்று தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார்.