அஸ்ரப் ஏ சமத்-
சிங்களய பலமண்டலய ஜக்கிய இராச்சியம் மற்றும் நாட்டை பாதுகாப்போம் எனும் இயக்கங்கள் இணைந்து இன்று (1.6.2019 மு.ப. 3.00 மணியலவில் கொழும்பு விக்டோரியா பாா்க் முன்றலில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினாா்கள்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சா் ரிசாத் பதியுத்தீன், ஆளுணா்களான அசாத் சாலி, கிஸ்புல்லா, முஜிபு ரகுமான் ஆகியோறு புகைப்படங்கள் கொண்ட போஸ்டா்கள் உயா்த்திய வண்னம் கோசங்களில் ஈடுப்ட்டனா்.
கிழக்கினை அரபு வசந்தமாக்கும் கிஸ்புல்லா, காடுகள் வனாந்தரங்களை அழித்து அரபு நாடுகளின் பெரும் நிதியில் இலங்கைக் கொண்டு வந்து பாரிய பயங்கரவாத்தினை உண்டுபண்னுகின்ற அமைச்சா் றிசாத் பதியுத்தீன் இதேவாறு ஆளுனா் அசாத் சாலி ஆகியோா்களை உடனடியாக ஜனாதிபதி பிரதமா் ஆகியோா் பதவியில் இருந்து அகற்றி இவா்களை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு அங்கு உரையாற்றிய தேரா் ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.
இவ் ஆர்பாட்டத்தில் அவா்களது வட்ஸ்அப் குருப் மற்றும் முக நுால் நண்பா்கள் பௌத்த மதத் தேரா்கள் குழுமியிருந்தனா்.