பிறந்த குழந்தைக்கு சஹ்ரான் எனப்பெயர் குறித்த வதந்திக்கு பொலிஸார் நடவடிக்கை வேண்டும் என்கிறார் DR ஆர்.முரளீஸ்வரன்

பாறுக் ஷிஹான்-
மது வைத்தியசாலையின் பெயருக்கு அவதூறு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினை நாடி தீர்வை பெறவுள்ளதாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் பிறந்த குழந்தைக்கு சஹ்ரான் பெயர் சூட்டப்பட்டதாக சமூக வலைத்தளம் மற்றும் சில இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்

தற்போதைய காலகட்டத்தில் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு இனமுரண்பாடுகளை தோற்றுவிக்கமுனைவதில் அனைத்து இன மக்களும் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தியுள்ளது.
இச்சம்பவம் போலியாக சோடிக்கப்பட்டதாகவும் காழ்ப்புணர்சியின் மூலம் எமது வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பப்பட்டுள்ளது.எனவே இது தொடர்பில் அவ்வாறான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லையென கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக தெரிவிக்கின்றேன்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியை சகித்துக்கொள்ளமுடியாத சில விசமிகள் தங்களது சமூகவலைத்தளங்களின் மூலம் சேறுபூசும் செயற்பாட்டினை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.

சில இனவாதிகள் இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க தூபமிடும் வகையில் இனவாத சமூகவலைத்தளங்களில் வைத்தியசாலையின் நற்பெயருக்கு கழங்கம் ஏற்படும் வகையில் அவதூறுகளை பரப்பிவருகின்றனர்.
மேலும் இதனை கண்டித்து நாளை சில தாதிய சங்கங்கள் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு அசம்பாவிதங்களும் எமது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவில்லையென வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றனர். இருந்த போதும் அவதூறுகளை பரப்பியவர்களுக்கு எதிராக. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -