அட்டாளைச்சேனைப் பகுதியில் இராணுவத்தினர் அட்டகாசம்-பாதிகப்பட்டோர் முறைப்பாடு தாருங்கள் நான் உதவுகிறேன்- சட்டத்தரணி அன்சில்.

நேற்று மாலை, பாலமுனை கடற்கரை வீதியில் பயணித்தவர்களை இராணுவ உடை தரித்த சிலர் கடுமையாக தாக்கி காயப்படுத்தியதாக அறிகிறேன்.

இத்தாக்குதல் குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட CCTV கமராக்களில் பதிவாகியுள்ளது.

இராணுவ உடையில் வந்தவர்கள் பயணித்து வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கமும் தெளிவாக அந்த வீடியோ பதிவில் உள்ளது.

ஆனாலும், இம்மிலேச்சத்தனமான சட்டத்திற்கு முறையான தாக்குதல் தொடர்பில், தாக்குதலுக்குள்ளான யாரும் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை.

இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டால், இதைவிட பாரதூரமான தாக்குதல்களும் நம்மீது எதிர்காலத்தில் நடாத்தப்படலாம்.

இவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக, தாக்குதலுக்குள்ளானவர்கள் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் மாத்திரமே நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

தாக்குதலுக்குள்ளான சகோதரர்களே..
முறைப்பாடு செய்ய முன் வாருங்கள்.
இதற்காக முழு மூச்சாக செயற்பட நான் தயாராக இருக்கிறேன்.

எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழையுங்கள்.
சட்டத்தரணி எம்.ஏ.அன்சில்
0772376806
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -