ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயரபீட உறுப்பினர் யஹ்யாகான் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து..!


லத்த மன அழுத்தங்களுக்கு மத்தியில் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறைகடமைகளில் ஒன்றை நிறைவேற்றியவர்களாக நோன்பு பெற்றுத்தந்த பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை போன்ற பாடங்களை கற்றவர்களாக முஸ்லிம்கள் தேசத்தினதும் சமூகத்தினதும் நலன்களை முன்னிறுத்தி, சகவாழ்வுக்காக அர்ப்பணிப்பு செய்ய திடசங்கற்பம் பூணுவோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயரபீட உறுப்பினரும் யஹ்யாகான் பௌண்டேசனின் ஆயுட்கால தலைவரும் சமூக சிந்தனையாளரும் தொழிலதிபருமான அல் ஹாஜ் ஏ.சி. யஹ்யாகான் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

பசித்தும் தாகித்தும் இருந்தனூடாக, மனிதனைப் புனிதப்படுத்துகின்ற நோன்பின் மூலமாக கற்றுக் கொண்டுள்ள அனைத்து நற்பண்புகளையும் வாழ்வொழுங்குகளையும் நாம் முழுமையாக கடைப்பிடிப்பதன் மூலமே அந்த நோன்பின் உண்மையான இலக்கை எம்மால் அடைந்து கொள்ள முடியும்.

ஏழைமக்களின் பசியையும் கஷ்டங்களையும் உணர்ந்துள்ள நாம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக எப்போதும் நேசக்கரம் நீட்டுபவர்களாகவும் வீண் செலவுகளை தவிர்த்து, சமூகத்தின் கல்வி, கலாசார வளர்ச்சிக்கும் பயனுள்ள விடயங்களுக்கும் வாரி வழங்குபவர்களாகவும் இருப்பதுடன் கெட்ட நடத்தைகளை முற்றாக தவிர்ந்து, நற்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் துன்ப, துயரங்களின்போது பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பவர்களாகவும் எந்தவொரு மனிதரிடமும் விரோதம், குரோதம், பகைமை பாராட்டாமல் அனைவருடனும் நல்லெண்ணத்தை வெளிக்காட்டுபவர்களாகவும் நாம் மாற வேண்டும்.

பேரின அடக்குமுறைக்கு மத்தியிலேயே நாம் இந்த பெருநாளை கொண்டாடுகின்றோம். மட்டுமன்றி எமது முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பு தொடர்பில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதுடன் இந்த இலங்கைத் திருநாட்டில் நாம் பல்லாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருகின்ற சமய, கலாசார, சமூக, பொருளாதார உரிமைகள் கேள்விக்குறியாக மாறுகின்ற அபாயமும் தோன்றியுள்ளது.
இதனால் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பெரும் அச்சம், பீதியுடன் புனித ரமழான் நோன்பு காலத்தைக் கடந்து, பெருநாள் தினத்தை அடைந்திருக்கின்ற நாம் இனிவரும் காலங்களை பொறுமை, சகிப்புத்தன்மையுடன் எமது சமூகக் கட்டமைப்பை பற்றிப்பிடித்தவர்களாக பிற சமூகங்களுடன் ஐக்கியமாகவும் அவர்களுக்கு முன்மாதிரியான ஒரு சமூகமாக வாழ்வொழுங்குகளை பேணி நடப்பதற்கும் சமூக, தேச விரோத செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்காமலும் விழிப்புடன் செயற்படுவோம்.

மேலும், ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -