தயாசிறி அங்கிள் என தனது வேண்டுகோளை ஆரம்பித்த ஹிருனிக்கா ஜனாதிபதிக்காக நீங்கள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தற்போதைய ஜனாதிபதி அவருடைய வேலை முடிந்து விட்டால் நடுத்தெருவில் விட்டு விடுவார். அதனையே துமிந்த திசாநாயக்க பாராளுமன்ற உறுப்பினருக்கும் செய்து வருகின்றார். நாங்கள் கடந்த ஒன்னறை வருடங்களுக்கு மேலாக அவருடன் சேர்ந்திருத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதனை அறிந்து கொண்டுள்ளோம்.
முடியுமான வரை மற்றவர்ளை பிரயோசனப்படுத்தி விட்டு அவர்களை கை கழுவிடுவதே அவருடைய மிகப்பெரிய பன்பாக உள்ளது. கடந்த தெரெண நிகழ்வும் உங்களுக்கு பெரும் உதாரணமாகவும் படிப்பினையாகவும் உள்ளது. ஆகவே நீங்கள் மிக விரைவில் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும். எனவே எதிர்க்கட்சியினை விட்டு எங்களுடைய பக்கம் வந்து அமர்ந்து கொள்ளுமாறு நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என சமயோசிதமாக பாராளுமன்றத்தில் ஹிருனிக்கா தெரிவித்தனை அவதானிக்க முடிந்தது.