இராணுவ புலனாய்வுத் துறை மேஜர் என கூறி ஏமாற்றியவர் கைது

ராணுவ புலனாய்வுத் துறை மேஜர் என கூறிக் கொண்டு அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் சந்தேகத்தின் பேரில் மொரட்டுவ, கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இப்பகுதியில் காணப்பட்ட அடுக்குமாடித் தொடரில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பல பெயர்களைக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி செயற்பட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபரிடமிருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் ஆடைகள் மூன்று, வாள் ஒன்று, ட்ரோனர் கருவி ஒன்று, தொலைபேசி ஒன்று, கெமெரா இரண்டு, மடிகணினிகள் மூன்று என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேநபர் மேலதி விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்றச்புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -