கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்(வீடியோ) Update



பாறுக் ஷிஹான்-

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அளகக்கோன் விஜயரெட்னம் ,சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

இவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டகார்கள்

தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் எங்கள் விடயத்தில் பொடுபோக்காக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த நல்லாட்ச்சி ஆரம்பித்த நாள் முதல் எங்களுக்கான இந்த விடயம் பாராமுகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுப்பது கல்முனையில் உள்ள ஒரு அரசியல்வாதி தான் காரணம்.

பிரதமரும்,ஜனாதிபதியும் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றிவருகிறார்கள். எங்களுடைய இந்த தேவையை அறிந்து போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவையும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் அவர்களையும் அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். நாங்கள் இங்கு இனவாத,பிரதேசவாத அலையை தோற்றுவித்து பிரச்சினையை உண்டாக்க வரவில்லை. எங்களுடைய போராட்டம் இந்த செயலகத்தை தரமுயர்த்தும் வரை தொடரும். நாங்கள் உணவருந்தாமல்,நீர் கூட அருந்தாமல் எங்கள் உரிமைக்கால போராட்ட இங்கு வந்திருக்கிறோம் என்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -