ஹட்டன் நகரத்தின் பிரபல சிங்கள் மொழிமூல பாடசாலையான ஶ்ரீ பாதகல்லூரிக்கு விஜயம் (14/6)ஒன்றை மேற்கொண்ட தொழிலாளர் தேசியமுன்னணியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்றஉறுப்பினருமான எம்.திலகராஜ் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
ஶ்ரீ பாத கல்லூரியின் அழைப்பின்பேரில் விஜயம் செய்த பாராளுமன்றஉறுப்பினரை கல்லூரி அதிபர் வசந்த கவிராஜ மற்றும் பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள் வரவேற்றனர். பாடசாலை குறை நிறைக் கேட்டறிந்தபாடசாலை வளாகத்தை பார்வையிட்டதோடு ஹட்டன் - டிக்கோயாநகரசபை உறுப்பினரும் முன்னாள் தலைவருமான வைத்தியர் அழகுமுத்துநந்தகுமாரின் வேண்டுகோளின்பேரில் மலசலகூட தொகுதி ஒன்றினைஅமைப்பதற்காக தனது கம்பெரலிய அபிவிருத்தி நிதியின் ஊடாகபத்துலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்ததுடன், மலைநாட்டு புதிய கிராமங்கள்உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழநி திகாம்பரம் ஊடாகஶ்ரீபாத கல்லூரியின் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு பத்து லட்சம் ரூபாநிதியை ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும்அமைச்சரின் இணைப்புச் செயலாளர் க.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.ஶ்ரீபாத கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தைபார்வையிட்டு தேவையான தளபாடங்களைப் பெற்றுக் கொடுக்கவும் உறுதிஅளித்தார்.