வீதியோரத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை(28) மாலை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக தரித்திருந்த கறுப்பு நிற முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்கிவிட்டு தப்பி சென்றார்.
இதன் போது தாக்குதலுக்கு உள்ளான முச்சக்கரவண்டியின் முன் கண்ணாடி உட்பட சில பொருட்கள் சேதமடைந்திருந்தன.
சம்பவ இடத்திற்கு வந்த இனந்தெரியாத ஒருவர் வீதியோரத்தில் இருந்த இரும்பு கம்பி ஒன்றை எடுத்து முச்சக்கரவண்டியை தாக்கி சேதமாக்கி விட்டு சென்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக ஸ்தலத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்ட போதிலும் வரவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும் முச்சக்கர வண்டி உரிமையாளர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தாக்குதல் மேற்கொண்ட நபரை அடையாளம் கண்டு முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவ இடத்தில் பொதுமக்கள் அதிகம் கூடியதனால் போக்குவரத்து சிறிது தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த சம்பவமானது தனிப்பட்ட குரோதத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.