உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாகவும், முஸ்லிம் தரப்பினரின் சாத்வீக சத்தியாக்கிரக போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது


எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் நல்லதொரு தீர்வினை உங்களுக்கு நான் பெற்றுத்தருவேன் என கல்முனை உண்ணாவிரதப் போராட்ட களத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இரண்டு சமூகத்தாருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நேற்று மாலை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ரத்தின தேரர்,

நான் அனைத்து நியாயங்களையும் முஸ்லிம் தரப்பினரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். இது தமிழர்களின் பிரதேச செயலகம் இல்லை இது இந்த நாட்டு அரசினுடைய பிரதேச செயலகம் எனவே இதற்கு எவரும் உரிமைகோர முடியாது. மீண்டும் எல்லை நிர்ணயம் செய்து அதன் அறிக்கையை எதிர்பார்ந்து நாங்கள் இந்த பிரச்சினையை தாமதிக்க முடியாது. எனவே இதற்கான முடிவினை நாங்கள் விரைவாக எடுக்கவேண்டும். உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எது எவ்வாறாக இருந்தாலும் இது விடயத்தில் நல்லதொரு தீர்வினை உங்களுக்கு நான் பெற்றுத்தருவேன் என்றார்.


இதே வேளை தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாதவிடத்து உண்ணாவிரதம் இருக்கும் நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு தீக்குளிப்போம் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் இருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளமை இத் தமிழர் போராட்ட களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாறாக மறு முனையில் முஸ்லிம் தரப்பினர் சார்பாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் குறிப்பிடும் போது, .

இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நியாயமற்றது.கல்முனைப் பிரதேசம் ஒரு நியாயமற்ற காரணத்தினால் பிரிக்கப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்துக்காக சாத்வீக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல், அதற்கான குழுக்கள் நியமிக்கப்படாமல் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தரக்கோருவது ஒரு நியாயமற்ற கோரிக்கையாகும். இதன் மூலம் அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய, இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் நடந்தேற வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.
இதே வேளை இன்று (21) தமிழ் தரப்பு உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாகவும், முஸ்லிம் தரப்பினரின் சாத்வீக சத்தியாக்கிரக போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -