முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதம்!


திமேதகு மைத்திரிபால சிறிசேன,
ஜனாதிபதி,
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,


கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தல்.

2019 ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை முஸ்லிம் உலமாக்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் கண்டனங்களை பாரிய அளவில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்தை மேலும் அவமானப்படுத்தி மலினப்படுத்தும் வகையில் மிக நுண்ணியமாக திட்டமிடப்படுகின்ற செயற்பாடுகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை அச்சமான சூழ்நிலைக்கு மூழ்கடிக்கின்ற சூழ்நிலைகளை அவதானிக்க முடிகிறது.
ஆளுநராக நேர்மையாகவும்,விசுவாசமாகவும் சகல சமூகங்களினது நலன்களை பேணும் வகையிலும் நாட்டின் நலன் கருதியும் சேவையாற்றினேன்.
எனினும் எனது சமூகம் மிக மோசமாக குறி வைக்கப்படுவதுடன் இனவாத சக்திகள் எவ்வித அடிப்படைகளும் இன்றி நான் இராஜினாமா செய்ய வேண்டும் என கோருகின்றேனர்.
அத்தோடு நான் எனது பதவியை செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யாவிட்டாலோ எனது முஸ்லிம் சமூகத்தின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்தொழிப்பதற்க்கான காரணமாக அமைந்து விடக் கூடிய வகையிலான அச்சுறுத்தல்களை அவதானிக்க முடிகிறது.
நான் இராஜினாமா செய்யாவிட்டாலோ அல்லது பதவி நீக்கம் செய்யாவிட்டாலோ எனது சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட மாட்டாது என்பதும் எனக்கு உணர்த்தப்பட்டது.
எனவே,இவ்வாறானதொரு சூழ் நிலையில் நான் எனது சமூகத்தின் நன்மை கருதி எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்.
எனது இந்த இராஜினாமா எனது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உங்களது கைகளை பலப்படுத்தும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன்.
- நன்றி-

உங்களது உண்மையுள்ள,
கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -