மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் 10 லட்ச ரூபா வட்டார அமைப்பாளரும் அமைச்சரின் பிரத்தியேக உதவியாளருமான சுப்பையா கமலதாசனின் வேண்டுகோளுக்கு அமைய கெர்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16.06.2019 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேக உதவியாளரும் வட்டார அமைப்பாளருமான சுப்பையா கமலதாசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபைஉறுப்பினருமான சிவனேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி செயலாளரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான கல்யான குமார், நோர்வூட் பிரதேச இளைஞரணி பொறுப்பாளர் கலை உட்பட பலரும் கலந்து கொண்டனர்.