குழுக்களை அமைபதால் மட்டும் மக்களின் தேவைகளை நிவர்த்திக்க முடியாது.-உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான்.




முஸ்லிம்களின் தலைநகரான கல்முனையை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இலங்கை வாழ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கவேண்டும்

ண்மையில் கல்முனையிலும் சாய்ந்தமருதிலும் இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து குழுக்களை அமைத்து அவர்களது கோரிக்கைகளை மழுங்கடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையேயும் பிரதேசங்களுக்கிடேயேயும் நீண்டகால கசப்புனர்வுகளையே ஏற்படுத்தும் என்றும் அரசியல் சித்துவிளையாட்டுக்களுக்கு மக்களை பலிக்கிடக்களாக ஆக்கவேண்டாம் என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளருமான யஹ்யாகான் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழ் சகோதரர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் அவர்களுக்கான பிரதேச செயலகத்தை பெறுவது என்பதைவிட அடையாளமற்று இருந்த சில அரசியல் வாதிகள் தங்களது முகவரிகளை புதுப்பிக்கும் நிகழ்வாகவே உணரமுடிந்தது என்றும் அவ்வாறு கல்முனை வடக்கு பிரதேசத்துக்கு செயலகம் அவசியம் என்று அந்த மக்கள் கருதினால் துறவிகளதும் அரசியல்வாதிகளதும் அஜந்தாக்களுக்கு அடிபணிந்துவிடாது சிவில் சமூக தலைவர்கள் பேசி சிறந்த முடிவுக்கு வரமுடியும் என்றும் தனது ஊடக அறிக்கையில் யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.

கல்முனை விடயத்துக்கு தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்க பல்வேறு எத்தனிப்புக்கள் எடுக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் முப்பது வருடங்களாக உள்ளுராட்சிமன்றம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராடிவரும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தமக்களின் கோரிக்கைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த மக்களது பிரச்சினையை தீர்ப்பதற்கும் பல்வேறு குழுக்கள் போடப்பட்டன அவற்றுக்கு என்ன நடந்தது என்று இன்னும் புரியவில்லை என்றும் அந்தமக்களின் கோரிக்கையும் சமாந்திரமாக தீர்க்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் தலைநகரான கல்முனையை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இலங்கை வாழ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கவேண்டும் என்று தெரிவித்த யஹ்யாகான் ,
எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பிரதேச அரசியல்வாதிகளின் மாற்றன்தாய் மனப்பான்மையும் ஒருகாரணம் என்று தெரிவித்துள்ள யஹ்யாகான், எதிர்காலத்தில் மக்கள் இது விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -