சேவையினையும் தேவையினையும் உயர்ந்து துரித கதியில் பொது மக்கள் பங்களிப்பில் அபிவிருத்தியடையும் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலை.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
வழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும் இருக்கின்றோம். ஆனால் பொது மக்கள் மனம் வைத்தால் எதனையும் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குவது அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையாகும்.
அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலை கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பிரதேச மக்களின் தேவையினை பூர்த்தி செய்து வந்த போதிலும் அது பல குறைபாடுகளுடனேயே காணப்பட்டன.
இவ்வைத்தியசாலையினை சுமார் 45 தோட்டங்களை சேர்ந்த (46000 ) நாற்பத்தாராயிரம் பேர் பயன்படுத்தி வந்தனர்.
குறித்த வைத்தியசாலையில் நோயாளர் விடுதி,பிரசுவ விடுதி,பிரேத அறை, பல்சிகிச்சை பரிவு சிறுவர் விடுதி,வாகன தரப்பிடம் போன்றன காணப்பட்ட போதிலும் அவை ழுழுமை பெறாத நிலையிலேயே காணப்பட்டன.
இதன் தேவையினை உணர்;ந்து அந்த வைத்தியசாலையின் நிலைய பொறுப்பதிகாரி வைத்தியர் நிசான் கல்பகே அவர்கள் பொது மக்களையும்,தனியார் நிறுவனங்னகளையும் உணர்த்தியதன் காரணமமாக இன்று அந்த வைத்தியசாலை அபரீத வளரச்சியினை கண்டு வருகின்றது.
இதன் பயனாக கண்ணை கவரும் வகையில் இந்த வைத்தியசாலையில் சிறுவர் பூங்கா பொது மக்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன்.நோயாளர்கள் தங்கள் இஸ்ட்ட தெய்வங்களை வணங்குவதற்காக விகாரை,மற்றும் இந்து ஆலயம் அமைக்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலையின் அலங்கார பணிகளையும்,வர்ணமிடுதல்,மின்சார புனரமைப்பு போன்ற பிரேதேசத்திலுள்ள சிடிசி நிறுவனம் இலவசமாக செய்து கொடுத்துள்ளது.விநாயகர் ஆலயத்தினை 475 கிராம அபிவிருத்தி சங்கம் செய்து கொடுத்துள்ளதுடன் விகாரையினையும் பல்சிகிச்சை பிரிவினையும் நகர வர்த்தகர் குலரத்ன புனரமைத்து கொடுத்துள்ளார்.மருந்தகத்தனையும் அயோன தோட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளதுடன் விடுதி திருத்த வேலைகளை அக்கரபத்தனை பிரதேச சபையும்,நோயாளர் காவு வண்டியினையும்,வீதியினையும் அரசியல் தலைவர்களும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
மக்களும் வைத்தியசாலை நிர்வாகமும் ஒன்றினைந்து செயப்பட்டதன் காரணமாகவே இந்த அளவுக்கு இந்த வைத்தியசாலையின் சேவையினை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிந்ததாகவும் இதற்கு முன் இந்த வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்திய பொறுப்பதிகாரிக்கு இதன் பங்கிருப்பதாகவும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி நிசான் கப்புகெதர தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -