மோதல் தொடர்பாடல் முகாமைத்துவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் செயலமர்வு நாளை (21) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
சிறப்பான ஊடக கலாச்சாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் ஊடகவியலாளர் தொழிற்துறை அறிவு மற்றும் சிந்தனைகளை மேம்படுத்தும் இலக்காக கொண்டு நடைபெறும்.
இந்த செயலமர்வு காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 2 மணி வரை நடைபெறவுள்ளது.
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் ஜனாதிபதி ஊடக பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளருமான தினேஷ் தொடங்கொட, பொலிஸ் ஊடக பேச்சாளார் சட்டத்தரணி ருவான் குணசேகர, இராணுவ ஊடக பேச்சாளார் சுமித் அத்தபத்து உள்ளிட்ட சிலர் இதில் உரையாற்றவுள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -