மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்திக்க உள்ளோம்-ரவூப் ஹக்கீம்


காநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்தித்து நாம் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் விடுத்துள்ள விசேட அறிவிப்பை நாம் மதிக்கின்றோம். அறிவிப்பொன்றை விடுத்ததற்காக அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த திங்கட்கிழமை இராஜினாமாக் கடிதத்தை, அறிக்கை ஒன்றின் ஊடாக முஸ்லிம் அமைச்சர்களான செய்தியாளர் மகாநாட்டுக்கு பின்னர் நாம் கூட்டாகவே கையளித்தோம்.
எனினும், அரசியலமைப்பின் பிரகாரம் தனித்தனியாகவே இராஜினாமாக் கடிதங்கள் கையளிக்கப்பட வேண்டும் என பிரதமர் கூறினார். இதற்கிடையில் நோன்பு பெருநாள் காரணமாக எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சொந்த இடங்களுக்கு பயணத்தை மேற்கொண்டனர்.

இதனால் இராஜினாமாக் கடிதத்தை கையளிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை முதல் நாம் அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகிவிட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாதுகாப்பு சூழலை கருத்திற் கொண்டு எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டோம்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -