அகமட் எஸ். முகைடீன்-
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு இன்று (16) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் தியெட்டர் மண்டபத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பி. தயாகமகே, கௌரவ அதிதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். றிகாஸ், அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சம்ராஸ் உள்ளிட்ட சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள், சமூர்த்தி பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 120 வறிய குடும்பங்களுக்கு முதல் கட்டமாக சமூர்த்தி நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கி வைக்கப்பட்டன.