அபு ஹின்சா-
ஏழைகளின் பசியெறிந்து அகதி வாழ்க்கை வாழ்த்த தலைவர் றிசாத் மீது அபாண்டமான குற்றசாட்டு - அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள் ஒன்றியம் !!
இந்த அரசை கவிழ்த்து புதிய ஆட்சி மாற்றத்தை கொண்டுவர பலவழிகளிலும் முயற்சி இடம்பெற்றுவரும் இந்த செயற்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேவாலயங்களில் இடம்பெற்ற செயல் முதல் அண்மைக்காலங்களாக முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் வன்செயல்கள்வரை எல்லாமே புதிய ஆட்சி மாற்றத்துக்கான முன்னெடுப்புக்களே இதனை இலங்கையில் வாழும் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இறக்காமம் பிரதேச சபையின் உபதவிசாளர் மௌலவி ஏ.எல்.நௌபர் தெரிவித்தார்.
இன்று மாலை இறக்காமம் லேக் வியூ ரெஸ்டுரெண்டில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர் அண்மையில் இடம்பெற்ற இறக்காமம் பிரதேச சபையின் விசேட அமர்வில் கூட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை கண்டித்து நாங்கள் கண்டன பிரேரணையை நிறைவேற்றியுள்ளோம். கண்டியில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரும், மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணாவிரத போராட்டம் செய்துவருவது அரசியல் கிளர்ச்சிகளை உண்டாக்கும் செயலாகும். ஏழ்மையில் பிறந்துவளர்ந்த அமைச்சர் றிசாத் அகதியாக இருந்து அரசியலுக்குள் வந்தவர். அவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது சரியான ஒரு விடயமல்ல என்றார்.
அங்கு உரையாற்றிய வரிப்பத்தான்சேனை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.சலீம் அவர்கள் யுத்த பூமியில் பிறந்த யாரும் யுத்தத்தை ஆதரிக்கவோ அல்லது யுத்தத்தை ஊக்குவிக்கவோ மாட்டார்கள் கௌரவ வர்த்தக,வாணிப, அமைச்சர் எங்களுடைய தலைவர் எப்போதும் சமாதானத்தை விரும்புபவர். அவருடைய சேவைகளின் போதும் முஸ்லிங்களை விட ஏனைய மதத்தவர்களைத்தான் முன்னிலைப்படுத்துவார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டை உலுக்கிப்போட்ட அரசியல் திருப்பத்தின் போதும் நல்லாட்சியை காப்பாற்றி ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முன்னின்றவர். அவர் மீது சுமத்தப்படும் போலிக்குற்றச்சாட்டுக்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பாரிய பங்காற்றிவரும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு அண்மையிலும் கூட பல அமைச்சுக்கள் வழங்கப்பட்டது. அவர் சிறந்த நிர்வாகி. அவரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மை எனில் அதை விசாரிக்க பல திணைக்களங்கள், பொலிஸ்,நீதிமன்றம் என பல வழிகளும் உண்டு. அதை விடுத்து இவ்வாறு செயலில் ஈடுபடுவதானது நாட்டின் ஒற்றுமையையும், சமாதானத்தையும் சீரழிக்கும் என்றார்.
வரிப்பத்தான்சேனை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.சலீம் அவர்கள் பேசிய விடயங்களை சிங்கள மொழியில் பேசிய ஏ.எஸ்.முனாஸ் போலிக்குற்றச்சாட்டுக்களை களைந்து உண்மை வெல்லும் என்றார். தொடர்ந்து பேசிய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும்,சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளருமான ஏ.சி.எம்.சஹீல் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அவர்களின் பழிவாங்கும் நடவடிக்கையே என்றார்.
இந்த ஊடக சந்திப்பில் மேலும் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர்,அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாலமுனை அமைப்பாளர் எம்.எஸ்.உஸைர் ,ஒலுவில் அமைப்பாளர்ஏ.எச்.எம்.அஸ்ஹர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.