கல்முனைஉண்ணாவிரதமும், #சத்தியாகிரகமும்_சாதித்தவை_என்ன??


முபிஸால் அபூபக்கர்-
ல்முனைப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பான பல போராட்டங்கள் தமிழர் , முஸ்லிம் தரப்பில் இடம்பெறுகின்ற வேளையில் அங்கு இதுவரை பல #சுவாரசியமான விடயங்கள் இடம்பெற்று இருக்கின்றன அவை என்ன என ஆராயும் பதிவே இதுவாகும்,

1).#தமிழர்_தரப்பு

#சாதித்தவை,..

கல்முனை தொடர்பான பிரச்சினையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் தரப்பின் தலைவராக கல்முனை விகாரையின் பிக்கு ரண்முத்துக்கல நியமிக்கப்பட்டுள்ளார், அவரால் 17;06:2019 அன்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் உண்ணாவிரதத்தில் ஏனைய மத குருமார்களும் இணைந்து ஆதரவு வழங்குகின்றனர், ஆனால் அங்கு இடம் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது அது தமிழ் மக்கள் இதுவரை காலமும் ஆயுத ரீதியாக, மற்றும் அகிம்சை வழியில் போராடிய போராட்டத்தையும், அதன் உணர்வையும் கொச்சைப்படுத்தும் செயல்களே இடம்பெறுகின்றன,

#ரத்தன_தேர்ரின்_விஜயம்

உண்ணாவிரதிகளால் ரத்தன தேரரின் விஜயம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டாலும் அவரது பேச்சு பிரதேச செயலகம் தொடர்பாக எதனையும் குறிக்கவில்லை, மாறாக, அவர் குறித்த விடயம் உண்மையானதா? இல்லையா என தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்க அதிபருக்கே(GA) உள்ளதாக குறிப்பிட்டார், ஆனாலும் அவரது உரை தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்தை சிதைப்பதாக இருந்தது,

1).இந்த நாட்டில் 75% சிங்கள மக்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களின் வீதத்தை குறிப்பிட தவிர்த்தார். ஏனையோருடன் இணைத்து 90% என்றார் ,
2).இந்நாட்டில் தமிழ், முஸ்லிம் நிலம் /உரிமைப்பிரதேசம் என்பதை நிராகரித்தார், இதில் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை பூரணமாக நிராகரித்தார்,
3). மட்டக்களப்பில் உள்ள Batticaloe Campus எனப்படும் புதிய கட்டடத்தில் இராணுவ பயிற்சி கல்லூரியை ஆரம்பிப்பதாகக் கூறினார், இது இராணுவ பிரசன்னத்தை வட கிழக்கில் எதிர்க்கும் தமிழர்களின் போராட்டத்தை கேள்விக்குள்ளாக்கி, இராணுவததை அதிகரிக்கும் எண்ணத்தைக் கொண்டது,
4). தன்னால் அமைக்கப்படப்போகும் புதிய பெரும்பான்மை அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குமாறு கேட்டார், அதில் அனைத்துப் பிரச்சினையும் தீரும் என்றார்.

மேற்படி பிரதான அம்சங்களைக் கொண்ட அவரது பேச்சு, உண்ணாவிரதிகளின் பிரச்சினைக்கு எதுவித தீர்வையும் தரவில்லை மாறாக , அவரது இனவாத அட்டவணையை தமிழ் மக்களிடையே விதைப்பதாகவே அமைந்திருந்தது,

#எம்பிட்டியே_சுமங்கள_தேரோ,

இவருடன் இணைந்து வந்த மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி, சுமங்கள தேரோ, குறித்த கல்முனைப் பிரதேசம் 99.9 வீதம் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட பிரதேசம், கூடி இருந்த மக்கள் தமிழர்கள் என்பதை கொஞ்சமும் மதிக்காது, மொழி பெயர்ப்பின்றி,தனிச் சிங்களத்தில் உரையாற்றி இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் இதுவரை காலமும் போராடிப்பெற்ற தமிழுக்கான சம மொழி அந்தஸ்த்தை துச்சமாக மதித்து தனது மொழிவாத கடும் போக்கை நிலைநாட்டினார், ஆனால் அவர் தமிழ் மக்களுடன் நீண்ட காலம் நெருங்கி வாழ்வதாகக் குறிப்பிட்டார்.

கூடி இருந்த போராட்டக்காரர்கள் எதற்காக கை தட்டுகின்றோம் என்பதறியாது, விளங்காத மொழிக்கு வியாழேந்திரன் உட்பட கை தட்டினர், மொழி பெயர்ப்பாளர், தேரர் குறிப்பிடாத உணர்ச்சிக் கருத்துக்களுக்கும் வேண்டுமென்றே உரமூட்டினார்..

#சந்தேகம்,

அந்தவகையில் தமிழ் மக்களின் வரலாற்றுப் போராட்டத்தை பல மட்டங்களிலும் காட்டிக்கொடுத்த #கருணா_அம்மான், #வியாழேந்திரன் போன்றோர், சிங்கள இனவாத தரப்புடன் இணைந்து முஸ்லிம்- தமிழ் இன விரிசலை உண்டு பண்ண மேற்கொள்ளும் நாடகத்தின் அனுசரணையாளராகவே கல்முனை விகாரதிபதி இருக்கின்றார் என்றே எண்ணத் தோன்றுகின்றது, அதே வேளை அரசியல்வாதிகளும், தம்மால் காட்டிக்கொடுக்கப்பட்ட தமிழர் போராட்டத்தையும் உரிய தருணத்தில் இன்னும் பழி வாங்குவதாகவே கொள்ள வேண்டியும் உள்ளது.

அந்தவகையில் தமிழ் மக்கள் தமது நீண்டகால உரிமைக்கான போராட்டப் பாதையில் இருந்து சில தமிழ், சிங்கள கறுப்பாடுகளால் பிழையாக வழி நாடாத்தப்படுகின்றனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது.


2). #முஸ்லிம்_தரப்பு,
முஸ்லிம் தரப்பினர் குறித்த பிரச்சினையை வெளி உலகிற்கு தெரியப்படுத்தவும், தமிழ் மக்களோடுபிரிபடாத பிரதேச செயலகத்தில் ஐக்கியமாக வாழவும் வலியுறுத்தி, 20:06:2919 இன்று சத்தியாக்கிரகதரதை ஆரம்பித்துள்ளனர், அது உலமாக்கள், வர்த்தகர்ரகள், புத்திஜீவிகள், பொதுமக்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது,

#சாதித்தவை,

முஸலிம் தரப்பினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும்,சத்தியாக்கிரகம் இதுவரை வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே கருத வேண்டி உள்ளது, இதன்படி கல்முனை மாநகருக்குள்ளேயும், அதற்கு வெளியேயும், குறித்த போராட்டத்திற்கு ஆதரவு பலத்து வருகின்றது,

கடந்த காலங்களில் அரசியல், நிர்வாக ரீதியான பிரச்சினைகளால் பிரிந்திருந்த அரசியல்வாதிகளையும், ஊர்த்தலைமைகளையும்,பொதுமக்களையும் இது இணைத்து வருகின்றது,

4/21 தாக்குதலின் பின்னரான முஸ்லிம்கள் மீதான. அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஒனரறிணைந்த அரசியல்வாதிகளைத் தொடந்து, இந்த ஒற்றுமை சாதாரண பொதுமக்களையும் ஒன்றிணைப்பதற்கான ஒரு தருணமாகவே நோக்கப்படுகின்றது, மட்டுமல்ல தமிழர்- முஸ்லிம் உறவை வளர்க்க சத்தியாக்கிரகம் இருப்பதற்கும் முஸ்லிம்தரப்பு தயாராக இருக்கின்றது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி,,

#படிப்பினை

அந்தவகையில் இதுவரை இது கல்முனை முஸ்லிம் தரப்பு ,தமிழ்மக்களுடன் சேர்ந்து ஒன்றாக வாழ விரும்புவதை ஏனைய ஊர் முஸ்லிம் மக்களும் ஆதரிக்கின்றனர் என்ற ஒரு பலமான உண்மையை தமிழ் பேசும் உலகிற்கு இந்த சத்தியாக்கிரகம் வழங்கி உள்ளது,

குறித்த முஸ்லிம் தரப்பின் செயற்பாட்டு ரீதியான ஒற்றுமை உணர்வின் செய்தியை தமிழர் தரப்பும், புத்தி ஜிவிகளும், அரசியல் வாதிகளும் நன்கு பயன்படுத்திக் கொள்வார்களாயின் ,அதில் தமிழ்பேசும் மக்களுக்கு நன்மை உண்டு அது தமிழ்பேசும் தரப்பின் இலுப்பை எதிர் காலத்தில் பாதுகாப்பதற்கான ஒரு நல்ல அறிகுறி என்பதே என்போன்ற பலரினதும் அபிப்பிராயமாகும்.

#வளமான_கல்முனையில் #பலமான #உறவைக்_கட்டி_எழுப்புவோம்..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -