அக்கட்சி மேலும் தெரிவித்ததாவது:
ஒழுங்காக தமிழ் மொழியைக்கூட பேசத்தெரியாத பிரபா கணேசன் அரபு மொழி பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர். நமது நாட்டில் வாழும் தமிழ் மக்களில் சுமார் 50 வீதமான தமிழர்களுக்கே தமிழை இலக்கண, எழுத்துப்பிழை இன்றி எழுத முடியாது என்பதே யதார்த்தம். ஆதலால் தமிழரில் பலருக்கு ஒழுங்காக தமிழ் எழுத தெரியாது என்பதற்காக நாட்டில் தமிழ் மொழி தேவையில்ல்லை என பிரபா கணேசன் கூறுவாரா?
இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் தமிழை எழுத்து பிழையின்றி எழுத வாசிக்க தெரியும் என பிரபா கணேசனால் கூற முடியுமா என கேட்கிறோம்.
இலங்கையின் தமிழ் துறை பேராசிரியர்களான எம் ஏ நுஃமான், ரமீஸ் அப்துல்லா போன்றோர்களுடன் தமிழ் இலக்கியம் சம்பந்தமாக விவாதித்து பிரபா கணேசனால் வெற்றி பெற்று காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது. அவ்வாறாயின் தமிழ் இலக்கியம், இலக்கணம் தெரியாத பிரபா கணேசன் போன்ற தமிழர்கள் இருப்பதால் நாட்டில் தமிழ் தேவையில்லை என யாராவது சொல்ல முடியுமா? இவ்வாறு சொல்பவர் உலக மகா முட்டாளாகத்தான் இருக்கும்.
இலங்கை முஸ்லிம்களில் கல்வி அறிவுள்ளோரில் 90 வீதமானோருக்கு அரபு எழுத்தை வாசிக்கத்தெரியும் என்பதை நாம் உறுதியாக கூறுகிறோம்.
நாம் பிரபாவுக்கு சவால் விடுக்கிறோம். அவர் சொல்லுகின்ற பகுதியில் இருந்து தமிழ் மொழி மூலம் கல்வி கற்ற முஸ்லிம் கல்விமான்கள் 50 பேரை நாம் அவர் முன் கொண்டு வந்து நிறுத்தி அவர்களால் அரபு எழுத்தை வாசித்துக்காட்ட முடியும் என நாம் நிரூபித்தால் அதனை ஏற்று பிரபா கணேசன் தனது அரசியலில் இருந்து அவர் ஒதுங்குவாரா என கேட்கிறோம்.
முபாறக் அப்துல் மஜீத்- உலமா கட்சி.