திருக்கோவிலிலிருந்து பாதயாத்திரை புறப்படும் திகதியில் மாற்றம்!

சிறப்பு நூல் வெளியீட்டுடன் 19இல் ஆரம்பிக்கசகலஏற்பாடுகளும் பூர்த்தி
காரைதீவு நிருபர் சகா-
வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரைக்குழு இம்முறை எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திலிருந்து பாதயாத்திரையை ஆரம்பிக்கவுள்ளது.
ஏலவே 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டபோதிலும் யாழ்.பக்தர்கள் திருக்கோவிலை வந்தடைவதில் இருதினங்கள் தாமதம் ஏற்படும் என்ற காரணத்தினால் 19ஆம் திகதி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் காலை 7மணிக்கு அங்கு பாதயாத்திரை தொடர்பான சிறப்புநூல் வெளியீடும் தொடர்ந்து விசேட சிறப்புப்பூஜையும் இடம்பெற ஆலய நிருவாகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக ஆலயபரிபாலனசபைத்தலைவர்சு.சுரேஸ் தெரிவித்தார்.
திருப்பழுகாமத்தைச்சேர்ந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தர் செல்லையா நற்குணம் எழுதிய முதல் நூலான'கதிர்காமப் பாதயாத்திரையின் சிறப்பும் கந்தப்பெருமாளின் அருளும்' என்ற தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா இடம்பெறவிருக்கிறது. நூல் வெளியீட்டுரையை பாதாயத்திரைச்சங்க ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்துவார்.

தொடர்ந்து ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் வழியனுப்புவதற்கான விசேட சிறப்புப்பூஜையினை நடாத்துவார்.
ஆலய பரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் வண்ணக்கர்.வ.ஜெயந்தன் செயலாளர் அ.செல்வராஜா உள்ளிட்ட ஆலயநிருவாகத்தினர் பங்கேற்பர். மேலும் பிரதேசசெயலாளர்கள் பிரதேசசபைத்தவிசாளர்கள் உபதவிசாளர்கள் என பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம் இம்முறை எதிர்வரும் ஜூலைமாதம் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
வழமையாக யாழ் . செல்வச்சந்நதி முருகன் ஆலயத்திலிருந்து புறப்படும் வேல்சாமி தலைமையிலான இலங்கையின்மிகநீண்ட பாதயாத்திரை நாட்டில்நிலவும் அசாதாரண சூழ்நிலைகருதி இம்முறை ரத்துச்செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 10ஆம் திகதி புறப்பட்ட வேல்சாமிக்குழுவின் யாழ்.பாதயாத்திரீகர்கள் 56பேர் தற்சமயம் மட்டக்களப்பிலிருந்து அம்பாறை நோக்கி பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.
அவர்களும் எதிர்வரும் 18ஆம் திகதி திருக்கோவிலைச்சென்றடைந்து வேல்சாமியுடன் இணைந்து அனைவரும் ஒன்றாக 19ஆம் திகதி கதிர்காமம் நோக்கி பயணிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -