முஸ்லீம்களில் ஒரு பிரபாகரன் உருவாகமல் இருக்க வேண்டும்-ஜனாதிபதி

முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்குவதே கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் நோக்கம் எனவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் யாரும் செயற்பட வேண்டாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றும் பிரகாரம் செயற்படுவதனால், அவர்களே வெற்றி பெறுகின்றனர். இதற்கு இடமளிக்காமல் செயற்படுவதனாலேயே நாம் அவர்களைத் தோல்வியடையச் செய்யலாம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

பயங்கரவாதிகள் குண்டுத் தாக்குதலை நடாத்தியது உயிர்களைப் பறிக்க மாத்திரமல்ல. பொருளாதாரத்தை அழிக்கவும்தான்.

கடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டுக்கு ஏற்பட்ட பிரதான இழப்பு, இன, மத ரீதியாக நாட்டுக்குள் பிளவு ஏற்பட்டதாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்துக் கொண்டு பெரும்பாலான அரசியல்வாதிகள் இனவாதத்தையும், மத வாதத்தையும் தூக்கிப் பிடித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

நேற்று (08) இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -