இது பற்றி உலமா கட்சி கூறியுள்ளதாவது,
இன்றைய நவீன யுகம் என்பது எவ்வளவுக்கெவ்வளவு பொய்களை ஊடக மயப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தமக்கு வெற்றியுள்ளது என நினைக்கும் காலத்தில் உள்ளோம். நாட்டில் பொய்யான அறிக்கைகள் வெளிவரும் போது அதனை மறுக்கும் அறிக்கைகளை வெளியிடாமல் முஸ்லிம் சமூகம் இருப்பதும் இன்றைய கைசேதங்களுக்கு காரணமாகும்.
கல்முனை பிரதேச செயலகம் என்பது நூறு வீதம் தமிழ் மொழியிலான பிரதேச செயலாகும். இதனை முஸ்லிம் செயலகம், தமிழ் செயலகம் என பிரிப்பதன் மூலம் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஏற்படுத்தப்படுவதால் முஸ்லிம்களுக்கு ஆபத்து இல்லை என லோகநாதன் போன்றோர் கூறுகின்றனர். அப்படியாயின் தற்போது இருக்கும் செயலகத்தின் மூலம் தமிழ் மக்களுக்கென்று விசேடமாக எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்பதை புள்ளி விபரங்களுடன் நிரூபிக்க முடியுமா?
பிரதேச செயலகம் என்பது அரச நிறுவனமாகும். அதில் யாருக்கும் அநீதி இழைக்கப்பட்டால் அதற்கெதிராக அரசாங்கத்திடம் முறையிட வேண்டும். அதனை விடுத்து கல்முனையில் வாழும் சமூகங்கள் மத்தியில் பகையை வளர்க்க கூடாது.
கல்முனை முஸ்லிம்கள் நூறு வீதம் வாழும் பகுதியில் இருக்கும் தரவைக்கோயிலுக்கு யுத்த காலத்தின் போது கூட முஸ்லிம்கள் எந்தவொரு தாக்குதலும் செய்யாமல் அதனை பாதுகாத்தனர்.
யுத்த காலத்தில் கல்முனை நகர் மட்டுமல்ல கல்முனை நகரில் உள்ள பொலிஸ் நிலையம் கூட பல தடவை தமிழ் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளதுடன் கொள்ளையடிக்கப்பட்டது. அப்படியிருந்தும் இன்னமும் அங்கு தமிழ் முஸ்லிம் ஒற்றுமை நிலவுகிறது. அதனை சீர்குலைக்க பேரினவாதிகள் செய்யும் முயற்சியை தமிழ் மக்கள் புரியாமல் இருப்பது கவலை தருகிறது.
யுத்த காலத்தில் கல்முனை நிர்வாக எல்லைக்குள் எந்தவொரு கோயிலும் இடிக்கப்பட்டு அங்கு பள்ளிவாயல் கட்டப்படவில்லை.
மிக நீண்ட காலமாக காரைதீவு சந்தியில் இருந்த பள்ளிவாயல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக நீதி மன்றில் வழக்கும் உள்ளது. கல்முனையில் எந்த இடிக்கப்பட்ட கோயிலுக்கெதிராக நீதி மன்றில் வழக்கு உள்ளது என கூற முடியுமா?
ஆகவே கல்முனை என்பது தமிழ் பேசும் மக்களின் அதிகார பூமியாகும். இங்குதான் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை உலகுக்கு காட்டப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட நாம் பல முயற்சிகள் எடுக்கும் போது இவ்வாறான சிலரால் வேண்டுமென்றே துவேசம் விதைக்கப்படுகிறது.
கல்முனை பிரதான வீதி, கல்முனை நகர், சந்தை போன்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான பகுதிகளை கல்முனை நகர் என்ற பெயரில் தனியான கிராம சேவகர் பிரிவாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைத்து வருகிறோம். அத்துடன் 1987ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைகளின் படி கல்முனையை பிரிப்பதற்கு முன் வந்தால் இது சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியும்.