ஆறு விக்கெட்டுகளினால் தென்னாபிரிக்க அணியை சாய்த்த இந்திய அணி

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 8 ஆவது லீக் போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே சவுத்தம்டனில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை குவித்தது.

228 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 47.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில் தவான் 8 ஓட்டத்துடனும், விராட் கோலி 18 ஓட்டத்துடனும், ராகுல் 26 ஓட்டத்துடனும், தோனி 34 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், பாண்டியா 15 ஓட்டத்துடனும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா மொத்தமாக 144 பந்துகளில் 13 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக 122 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணிசார்பில் ரபடா 2 விக்கெட்டுக்களையும், ஆண்டில் பெஹல்குவே மற்றும் கிறிஸ் மொறிஸ் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இத் தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்க அணி மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -