சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.....


கிழக்கு மாகாணத்தின் படித்த தமிழர்கள் கவனத்திற்கு...
நேற்று கல்முனை போராட்டக் களத்திற்கு வந்த அமைச்சர்களை விரட்டி அடித்ததாக பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் செய்திகள் உலவுகின்றன...

அமைச்சர்கள் மனோ கணேசன் - தயா கமகே மற்றும் சுமந்திரன் எம்பி ஆகியோர் விரட்டப்பட்டதாக புளகாங்கிதம் வேறு சிலருக்கு..

ஒரு அரசின் பிரதிநிதிகள் சந்திக்க வரும்போது உங்கள் உள்வீட்டு அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களுடன் பேசியிருக்கலாம்..

அவர்கள் கொண்டுவந்த யோசனைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றால் அவற்றை புறந்தள்ளி உண்ணாவிரதத்தை தொடர்ந்திருக்கலாம்.

எல்லாவற்றையும் விடுத்து... மேல் பார்த்து எச்சில் உமிழ்ந்தது போல நடந்துகொண்டு யாரோ ஒரு உள்ளூர் அரசியல் பின்னணியில் செயற்பட்டு நடந்து கொண்டிருக்கிறது கல்முனை தமிழ்ச் சமூகம்...
உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் கூறியிருந்தால் அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் மனோவும் தயாவும் பேசியிருப்பார்கள்.. மறுபக்கம் தமிழரசுக் கட்சியும் இனமுறுகல் இல்லாமல் நிதானமாக இந்த விடயத்தை கையாண்டிருக்கும்...( அவர்கள் மீது தவறுகள் இருந்தாலும் அவர்களை இப்படி எதிர்க்கும் தருணமா இது ..? )
சரி.. இப்போது ஞானசார தேரர் வந்து ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எடுத்து தருவதாக சொல்லியிருக்கிறார்..
அதற்குள் அப்படி செய்யாமல் மீண்டும் தேரர் வந்தால் நேற்று நடந்து கொண்டது போல அவரிடம் நடந்து கொள்வீர்களா?

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் கல்முனை தமிழ் மைந்தர்கள் யோசியுங்கள்...!

சில பின்னூட்டல்கள்.....
  • Marath Tamilan Marath Tamilan கடந்த உள்ளூராட்சி தேர்தல் மேடையில் சம்பந்தன் ஐயா வெண்டதும் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என்று பேசிவிட்டுப்போனார் வருடம் கடந்தும் நடந்தது ஒன்றும் இல்லையே

    அதே போல் ஒரு நம்பிக்கை இல்லாத வாக்குறுதியாக இருக்கும் என்றும் எதிர்த்து இருக்க முடியும் தானே ஐயா
    4
  • Safeer Mohamed ஆத்திரக் காரணுக்கு புத்தி கொஞ்சம் கொட்டானாம்.
  • Antony Gomez Superb siva
  • Jeyaraman Essakie Kumar அருமை சிவா
  • Saja Ramlan தமிழ் முஸ்லீம் மக்கள் இருபாலாரும் நடுநிலையாக நின்று நிறைய யோசிக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்
    2
  • Rami Ramya Unmai
  • Muhammath Sh சில ஆண்டுகளுக்கு முன் கல்முனைப் பிரதேசத்தில் இருந்து தமிழ் இளைஞர் குழுவொன்று ஞானசாரரை சந்தித்தித்ததாக ஞாபகமிருக்கிறது, அனைத்தும் அவர்களின் நிகழ்ச்சி நிரல்.
    • KN Rasih Muhammath Sh அவர்களின் நிகழ்ச்சி நிரல் என்று தெரிந்தும், தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது என்று முஸ்லிம் மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கலாம் அல்லவா....

      (ஒரு காலத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சிங்கள அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது)
    • Safeer Mohamed KN Rasih முஸ்லிம் இளைஞர்கள் பலர் புலிகளிலும் இணைந்திருந்தனர்
    • Muhammath Sh KN Rasih அதற்காக ஒரு குழுவை அரசாங்கம் நியமித்திருக்கிறது, பல கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது...இருந்தும் முஸ்லிம் என்ற பெயர் வந்தாலே பிரச்சினைக்கு உட்படுத்த பேரினவாத சக்திகள் தயாராக இருக்கும் இச் சந்தர்ப்பத்தை நீங்கள் சரி காண்கிறீர்களா?
    • KN Rasih Safeer Mohamed புலிகளில் இருந்தனர்... அதேவேளை 4 மாவீரர்கள், மற்றும் அவர்களின் பெற்றோர் 2009 வரை அத்தினத்தில் கௌரவிக்கப்பட்டதையும் அறிவேன்....

      அப்போ அது போலதானே இதையும் பார்க்க வேண்டும்...
      See More
    • KN Rasih Muhammath Sh புரிகின்றதுதானே...

      எனவே இதை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் ஹாரிஸ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இதை தமிழர்களுக்கு கொடுப்பதில் என்ன அநியாயம் தமிழர்களால் ஏற்ப்பட போகின்றது...
      See More
    • Safeer Mohamed KN Rasih உண்மைதான்!! ஆனால் 1990 ம் ஆண்டு எட்டாம் மாதத்திற்குப் பிறகு புலிகளுடன் இருந்த. முஸ்லிம் போராளிகளுக்கு என்ன நடந்தது??? இராணுவத்துடன் இருந்த ஒரு சிலர் செய்த கொலைகளை குறிப்பிடும்போது புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் ஒப்பீடு செய்யSee More
      1
    • KN Rasih Safeer Mohamed சிலையை வைத்தாலும் இல்லை. .

      வைத்துக்கொண்டுதான் உள்ளனர்....


      இதை சிறுபான்மை புரிந்துணர்வுடன் தீர்க்காததன் விளைவே மாறி மாறி சிறுபான்மையை அடக்க காரணமாக அமைந்துவிடுகின்றது...

      அடுத்து புலிகள் விடயம் முஸ்லிம் அரசியல் சோரம் போனமையும் ஓர் காரணமாக அமைந்தது....
    • Safeer Mohamed KN Rasih சிறுபான்மை இனங்களை ஒற்றுமாயாக விடக்கூடாது என்பதில் பெரும்பான்மை இனம் தெளிவாக திட்டங்களை தீட்டி வெற்றியும் அடைகிறது!!! சிந்திக்க மாட்டார்களா இந்த மக்கள்!!!
      1
    Write a reply...
  • Sarawanamuthu Jeyamohan Vadakkil sampantharukkum.etey nilamaitaan eatpadum.
  • Abdul Mubarak M. Rafi பல விடயங்களில் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தான் இந்த நிலமை அவர்களது அரசியல் தலைமைகளை விட ஞானசார தேரருக்கு முக்கியத்துவம் வழங்கியமை எந்தளவிற்கு யதார்த்தமானது என்று தெரியவில்லை ஆனால் இது இறுதியில் தலையில் மண்ணை வாரிய கதையாக ஆகாமல் இருந்தால் சரி.
    1
  • Ajmeer Razick சரியாக சொன்னீர் அண்ணா,
  • சுப்ரமணிய பிரபா சிந்திக்குமா அந்த சமூகம்.
  • Fareed Segu Mohamed தங்களை தாங்களே நிறுவகித்துக்கொள்வதற்கான காய்நகர்த்தல்களை நரிகளிடத்தில் ஒப்படைத்தது அவர்களை அவர்களே கொச்சைப்படுத்திக்கொண்ட செயல்.
  • Mohames Uwais ஒரு.மாதத்தின்.பின்னர் ஞானசார தேரர் கோரிக்கை நிரைவேறா விட்டால் கல்முனைக்கு தனியாக வராமல் பல பஸ்களில் ஆட்களை வரவழைப்பார் இதன் பின் என்ன நடக்கும் ? ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
  • Ahamed Aashik தமிழ் தேசியம் இந்துத்துவா தேசியமாக மாறி வருகிறது என்பதற்கு கல்முனை சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு
  • Akash SJ அவரவர்கள் சரியான நேரத்தில் சரியாக செய்து இருந்தால் ஏன் இன்று அந்த மக்கள் தேர்ர்களின் ஆதரவை பெற்று போராட்டம் நடத்துகின்றார் ????
    தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக இயங்க வேண்டிய தருனம் என்று கூறிகொண்டு ஏன் அதை தரம் உயர்த்த முஸ்லிம் மக்கள் ஏன் எதிர்ப்பை தெரிவி
    See More
    3
  • Thayaparan Sabaretnam அந்த எதிர்ப்பு கூட்டணி அங்கத்துவ ர் மேலான அதிருப்தியே ஒழிய மற்ற அரசாங்கப் பிரதிதிகளை குறி வைத்து நடாத்தப்பட்டதல்ல என்பதை ஊடகங்கள் தெளிவு படுத்த ]வேண்டும்
    1
  • Paranthaman Thiru Chittampalam : சுமந்திரனை மக்கள் எதிர்த்ததற்கு பின்னால், அவர்களது நான்கு ஆண்டு கால அனுபவம் இருக்கின்றது. அவர்கள் உணர்ச்சிவயப்பட்டு இயங்கினார்கள் என்று அவமதிக்காதீர்கள். தேரரை நாளை அவர்கள் எதிர்க்காமல் விடக்கூடும். அவர்களைப் பொறுத்தவரை ஞானசாரரும் சுமந்திரனும் ஒன்றல்ல.
    2
  • Nallasegaram Arulanantham 30 வருடம் கால அவகாசம் போதாமல் இன்னும் 3மாதத்திற்குள் இவர் செய்வாராம்
  • Farook Sihan Good..message
  • Mohamed Rilzath Asam தமிழர்களுக்கு 1 அல்ல 100 சபைகள் வேண்டும் எண்றாலும் பிரித்து எடுங்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லமல், பல சபைகளை பிரித்து எடுத்தும்தான் இருக்கிண்றார்கள் அதற்க்கு முஸ்லிம் சமூகம் ஒண்றுமை சொல்லவில்லை தமிழர்களின் பிரதேச எல்லைக்குள் இண்றும் வாழ்ந்துகொண்டSee More
  • Rajh Selvapathi அங்கு காட்டப்பட்டது ததேகூவுக்ம் சுமந்திரனுக்குமான எதிர்ப்பு. அரசுகாகானது அல்ல.
    2
  • KN Rasih உங்கள் நிலைப்பாடே எனது நிலைப்பாடும்,....

    ஆனால் இந்த விடயத்தில் சுமந்திரன் அவர்கள் அரசின் தூதுவராக வருவதை அங்கு மக்கள் இப்போதைய நிலையில் நிதானித்து செயல்பட வாய்ப்பு இல்லை. ..
    See More
    1
  • Nirshan Ramanujam நிச்சயமாக.
  • Mohamedsameem Mohamedmusthafa குறுக்கு வழியில் சிந்தித்து அரச தூதுவர்களை வீராப்பு காட்டி விரட்டியடித்துவிட்டு கைசேதப் படுவதில் பிரயோசனம் இல்லை.
  • Muhunthan Mohan விரட்டப்பட்டது உண்மை ஆனால் அமைச்சா் மனோ கணேசன் விரட்டப்பட வில்லை சுமந்திரன் மீதுதான் மக்களுக்கு கோபம் 3 மாதத்தில் தீா்வு எனும் விடயத்துடன் அவர் வந்தது தவறு காரணம் இப்பிரச்சனையை வரவு செலவுக்கு ஆதரவு தெரிவிக்கும் போதே தீர்த்து வைத்திருக்க முடியும் ஆSee More
  • Sathurs Kanth இந்த செயற்பாடுகளால் தமிழர்களுக்குள்ளேயே எதிரிகளை அதிகரிக்கச் செய்கின்றதாகவே நான் நினைக்கின்றேன். மக்கள் சுமந்திரன் அவர்களை வெறுப்பதால் அவருக்கு ஏற்படும் இழப்பை விட சுமந்திரன் தமிழ் மக்களை வெறுத்தால் தமிழர்களுக்கு ஏற்படும் இழப்பே அதிகமாகும். இவ்வாறு தாSee More
    3
  • Sharma Ram Ven athuraliya thero n ven gnanasara thero presently leaders, and tna surrender with govt but nothing
  • Bang Bang Rizy இதே தான் அண்ணா தமிழ் சகோதரர்களுக்கும் நான் கூறினேன்... கவலையான விடயம் என்னவெனில், மக்கள் சில அரசியல்வாதிகளினதும், சில மதகுருக்களினதும் போலித்தனமான செயற்பாடுகளையும் பேச்சுக்களையும் நம்பி உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.. தங்களுடைய மனசாட்சியையும்,மூளையையும் வைத்து யோசித்தாலே எது சரி? எது பிழை? எதற்காக இந்த செயற்பாடுகள்? யார் இதில் சுயலாபம் அடைய நினைக்கின்றார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்வார்கள்..
    2
  • Abu Azaff A Cather இவருக்கு கொடுத்த மரியாதை கூட தமிழ்ப்பிரதிநிகளுக்கு இல்லையென்பதே உண்மை.
    Image may contain: 11 people, outdoor
    1
  • Nano Mathi உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் கூறியிருந்தால் அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் மனோவும் தயாவும் பேசியிருப்பார்கள்.. மறுபக்கம் தமிழரசுக் கட்சியும் இனமுறுகல் இல்லாமல் நிதானமாக இந்த விடயத்தை கையாண்டிருக்கும்...( அவர்கள் மீது தவறுகள் இருந்தாலும் அவர்களை இப்படி எதிர்க்கும் தருணமா இது ..? ).............management ilatha kalmunai kalmunai iljarkalin thavaru..
  • Zahir A. Munahir ஆம் சகோ எனது கருத்தும் அதுவே தமிழ் புத்திஜீவிகள் ஒதுக்கப்படுவது வேதனைக்குரியது. நான் சுமந்திரன் ஐயாவை சிறந்த ஒரு புத்திஜீவியாக கருதுகிறேன். கல்முனையில் நேற்று நடந்த சம்பவம் வேதனைக்குரியது. 
    அதே தீர்வுடன் வந்த ஞானசாரவுக்கு அதிவணக்கத்துக்குரிய வரவேற்பு.
    1
  • Winston Thangaraja நாம்தானே மேலே பார்த்துக்கொண்டு காரி உமிழ்பவர்களாயிற்றே.
    1
  • Siva Kuruparan 8 மாசமா என்ன செய்தவை?
    இது முதல்தரமில்லை ஏமாத்து வாக்குறுதி கொடுப்பது
  • Satty Anandan தமிழர் என்ற உனர்வுடன் சென்ற அரச பிரமுகர்கலை ஆதரிக்காமள் அடாவடிகாட்டிநாள் வெல்லுமா எமது கோரிக்தை
    2
  • Dinesh Viju எப்ப இருந்து கூட்டமைப்பு அரசின் பிரதிநிதி ஆனார்கள்?
  • Kamil Ahamed இந்த சூழ்நிலையில் அன்புள்ள தமிழ் மக்களே, நீங்கள் அனைவரும் புத்த துறவிகள் ஆதரவைக் கொண்டிருக்கிறீர்கள், யுத்த காலம் காணாமல் போனவர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்வது ஒரு நல்ல நேரம்
    1
  • Neela Ravi உங்களுக்கு இதெல்லாம் விளங்காது.
  • Sharfan Ahamed உண்மையே...
  • Jaufer Mohamed Ivanuhal padu puttisalihal
  • Abdeen Aldaf Ahmed சிறந்த ஆலோசனை
  • Shegar Somasundaram கல்முனை மக்கள் மற்றும் அல்ல முழு வடக்கு கிழக்கு தமிழ் ம்ககளும் தமிழ் தரப்பினரினலால் பல விடயங்களிலு ஏமாற்றப்பட்டு இருக்கிரார்கள். குறிப்பாக தமிழ் கைதிகள் விடுதலை மற்றும் வடக்கு கிழக்கு தீர்வு திட்டம் இன்னும் பல. இவர்கள் வசம் பல தடவைகள் சந்தர்பம் வந்தும்See More
  • Seyed Bar Mowlana தமது தலமைத்துவங்களை நாமே புறக்கணிப்பது இலங்கையில் சிறுபான்மையினருக்கு அறிவு பூர்வமானதாக அமையாது
    1
  • Mohan Jaffna உறுதி மொழி குடுக்க கூடிய பதவியில தேரர் இருக்கிறாரா???
    1
  • Moorththy Dinu இவ்வாறானதொரு கருத்தையே நானும் பதிவிட்டேன் ஆனால் காலச்சூழ்நிலையும் முன்னெடுப்பும் மக்களின் மனங்களில் வெவ்வேறான எதிர்பார்ப்பை பிரதிபலிப்பு செய்திருப்பதோடு ஊள்ளூர் அரசியலில் தாக்கமும் இவ்வாறான சந்தர்ப்பத்தை உருவாக்கி இருக்கலாம் ....

    ஆனால் மக்களின் முன்னெடுப்பின் பங்களிப்பு அளப்பெரியது அந்த வகையில் இந்த விடையத்தில் எல்லோரையும் ஒன்றினைப்பது பொருத்தமல்ல என நான் கருதுகிறேன்....
  • Ilm Roomy பூனைகள் இரண்டு குரங்கிடம் அப்பம் பிரித்த கதைதான் ஞாபகம் வருகிறது.
    1
  • Farsan S Mohammed தமிழ் மக்கள் சுமந்திரன் அவர்களை வெறுப்பதால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை, சுமந்திரன் தமிழ் மக்களை வெறுத்தால் தமிழர்களுக்கு ஏற்படும் இழப்பே அதிகமாகும்.
  • Shan Kumar முட்டாள்கள்
  • Abu Juman அரச. அமைச்சர்களைவிட. ஒரு சாதாரண தேரருக்கு அதிகாரம் இருக்கிறதா.??.?. இதைக்கூட. சிந்திக்கமுடியாதவர்கள்
  • வேதநாயகம் தபேந்திரன் உங்களுடைய கருத்து சரி
  • Mohamed Ismaeel பிக்குகள் உங்கலுடன் செரகாரணம் அந்த இடத்தை அவர்கள் சொந்தம்மாக்கி அந்த இடத்தில் சிங்கலமக்கலை குடி அமர்த்த திட்டம் போடுகிறார்கள் இது புரியாம தமிழ்மக்கள் அவர்கலை நம்பி அவர்கலோடு செர்ந்து கொன்டு ஆட்டம் போடுகிறார்கள்
  • Vetri Vel திருந்தமாட்டானுகள் Sir....
  • Yogendran Subramaniam Muslim community never join hand in hand with Tamils becoz of some religeous principles but Kalmunai issue hardly win without Buddhism
  • Seerangan Periyasamy ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
    1
  • Andiyappan Bala உண்மை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -