1985களில் ஊடகத்துறைக்குள் காலடிவைத்த நௌஷாட் மொஹிடீன் லேக்ஹவுஸ் தினகரன் ஆசிரிய பீடத்தில் பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்து அவரை நான் அறிவேன்
தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர்.அலுவலகத்துக்குள் பிரவேசித்தால் கடமையில் கண்ணாயிருப்பவர்.
அனேகமாக இரவு 9.00 மணிக்கும் அதிகாலை 3.30மணி வரை கைபேசிப் பாவனையை நிறுத்தி வைப்பவர்.காரணம் கேட்டபோது மறு நாள் பணிக்காகத்தான் என்பார் .கடிகாரத்தின் முட்கம்பிகளுக்கு மரியாதை கொடுப்பவர்.
இவர் தினகரன் ஆசிரியர் பீடத்திலிருந்த காலமெல்லாம் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்.பிராந்திய செய்தியாளர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்குவதில் சாமார்த்தியர்.
இவர் தினகரனில் பணியாற்றிய காலத்தில் பிரதம ஆசிரியராக இருந்தவர்கள் கூட மொஹிடினின் மீது முழு அளவிலான நம்பிக்கையை வைத்திருந்தனர்.
தினமின.டெய்லி நியூஸுக்கு வந்திருக்கும் மொழி மாற்றச் செய்திகளைக் கூட இவரிடம் கொடுத்திருப்பார்கள்.ஆசிரிய பீடத்துக்கு செல்லக் கிடைக்கும் நாட்களில் இதைக் காணக்கிடைத்தது.
நாட்டிலுள்ள தூதரகங்களிற் சிலவற்றின் ஆஸ்தான மொழி பெயர்பாளர் என்று கொழும்பு நண்பர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். 2001அல்லது 2002என்று நினைக்கின்றேன்.மாவனல்லையிலும் அதனை அண்டிய சில இடங்களிலும் இடம் பெற்ற சம்பவங்களின் போது இவர் தயார் செய்து வைத்திருந் உண்மைச் செய்திகளை அச்சேற்றாமல் தடுக்கப்பட்டதையடுத்து அதிருப்தியடைந்த இவர் அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர் வழமைபோன்று தனது மொழிபெயர்ப்புத் தொழில் ஈடுபட்ட இவரை அவருடைய ஊடக நண்பரும் ரூபவாஹினி செய்திப்பிரிவில் தமிழ் செய்திப் பிரிவுக்குப் பொறுப்பாயிருந்த யாக்கூப்புடன் இணைந்து முஸ்லிம் மீடியா எலைன்ஸ்ஸை உருவாக்கி யாக்கூப் தலைவராகவும் இவர் செயலாளராகவும் பணியாற்றினர்.
இவ்வாறான நிலையில் இவரது நண்பரின் சிபார்சிலோ அல்லது இவரது முயற்சியினாலோ ரூபவாஹினி செய்திப்பிரிவில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் 2004ம் ஆண்டளவில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் எம்.பியும்.சிரேஷ்ட சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஏ.எம்.ஏ.சுஹைர் தலைவராக நியமனம் பெற்றார்.
பின் நாட்களில்- தலைவர் சுஹைர் நௌஷாட்மொஹிடீனைத் தமிழ் செய்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளரா நியமனம் செய்தார்.
நௌஷாட் செய்திப் பிரிவுக்கள் வந்த கையோடு நாளேடுகளில் இன்று- செய்தித்தாள் கண்ணோட்டத்தை முதற்தடவையாக ஆரம்பித்து மும்மொழிப் பத்திரிக்கைகளையும் தனது வார்த்தை ஜாலங்களால் விளாசுவது அந்த நிகழ்சிக்கு அதிக நேயர்களை இவர்பால் ஈர்கச் செய்தது.
சுவர்ணவாஹினியில் முத்த ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார் “முல் பிடுவவை” இரு மொழிகளில் நன்றாகவே கலக்குவார்.தமிழில் உள்ள செய்திகளை தலைப்பைத்தவிர வேறு செய்திகளை அவர் கையாள்வதில்லை.ஆனால் நௌஷாட் இவரைவிட ஒருபடி மேல்.
.இவரது மொழி ஆற்றல் தொடர்பில் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் நண்பர் என்.எம்.அமீனுடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் மனநிறைவாக நௌஷாட் மொஹிடீனின் மொழி ஆற்றல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் அபாரமானவை.எங்களுக்கு மத்தியில் முன்னணி ஊடகவியலாளர்களாயிருக்கும் ஒருவர் மற்றவரைப் புகழ்ந்து உரைப்பது மன நிறைவைத் தருகின்றது .மாஷா அல்லாஹ்.
சில காலத்தின் பின்னர் ரூபவாஹினியை விட்டு வெளியேறிய இவர்- ஐ.ரீ.என்.-வசந்தம் தொலைக்காட்சிச் சேவையுடன் தனது பணியை ஆரம்பித்து தனது மொழியாற்றலின் மூலம் அதிக நேயர்களைக் கவர்ந்தவராக புகழ் பெற்றார்.
மனிதர்களிற் சிலருக்கு அவர்களின் திறமைகளினால் -செயற்பாடுகளினால் கிடைக்கின்ற புகழும் செல்வாக்கும் உச்சநிலை அடையும் போது எங்கிருந்தோ வருகின்ற காழ்ப்புணர்சிகள் பதவியைப் பறிக்கும் முயற்சிகள் படுகுழியில் தள்ளிவிடத் தயாராகும்.என்பதற்கு இவர்; விதிவிலக்கானவரல்ல. என்பதற்கு இன்றைய கால சூழ்நிலை நல்ல உதாரணமாகும்.
அந்த அடிப்படையில் சில காலத்துக்குப்பின் அங்கிருந்து வெளியேறிய அவர் யூ.ரீ.விக்கு வந்து பணியாற்றத் தொடங்கி வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு ஹனீபையும் அழைத்துக் கொண்டு சென்று தனது செய்திச் சேவை தொடர்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.
அந்த வகையில் அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களில் விளம்பரதாரர்களைத் தேடுவதிலும் ஈடுபட்டார். தகுதி வாய்ந்த செய்தியாளர்களைத் தெரிவு செய்து அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டார்.
மட்டு அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடொன்றைச் செய்து தருமாறு கேட்டபோது அக்கரைப்பற்றில் எனது ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது இவர் தெரிவித்த கருத்துக்கள் இந்த UTv ஷெனலை வளர்ப்பதில் அவர் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படத்தியது.ஆனாலும் அங்கிருந்து இவர் ;கழற்றப்பட்டார்.
சிறிது காலத்தின் பின் மீண்டும் யூ.ரீ.வீ.ல் இணைந்து நாட்டிலுள்ள ஏனைய ஷெனல்களுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு பயணிக்கும் இவர் மீது சில சில்லறைகள் வசைபாட முற்படுவது நகைப்புக் கிடமாகும்.எங்களுக்கு மத்தியில் உள்ள சில தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஏதாவது நிகழ்சியைக் கையிலெடுத்தால் பிரபலங்களை அழைத்து கடித்துக் கொதறுவார்கள் பின்னர் அவரிடம் மண்டியிடுவார்கள்.
இது எடுத்த வாந்தியை-------என்ற அசிங்கம் போல் இருக்கிறது.சில அமைச்சர்களை பேட்டி காண்பார்கள் அவரை அளவுக்கதிகமாக தரக்குறைவாக மதிப்பிடுவார்கள்
.செய்திப்பார்வை செய்வார்கள் அதற்கப்பால் போவார்கள் ஷெனலை விட்டு வெளியேறுவார்கள்.
இனி மாற்று அணிக்குள் நுழைவார்கள் பின் ஏற்கனவே வாந்தி எடுத்தவரிடம் போவார்கள் .
.நௌஷாட் மொஹிடீன் அந்த மாதிரியான ஆள் இல்லை.நேர்மையானவர். துணிச்சலானவர்.அறிவுப் பெட்டகம்.இந்த மகனுக்கு நாட்டிலுள்ள முஸ்லிம் தமிழ் ஊடகவியலாளர்களின் ஆதரவு எப்போதும் உண்டு.
மேலும் சிலர் பேனாவைக் குத்திக் கொண்டு கமெறாவை நீட்டிக் கொண்டு வம்பளப்பதைத் தவிர்ப்பது எல்லோருக்கும் நல்லது.
தற்போது நாமிருக்கும் நிலையில் சேறடிப்பதைத் தவிர்த்து மற்றவரை வீழ்தி புது வாழ்வு தேட முனையக்கூடாது.
குருவித் தலையில் பனங்காயை வைத்தாற்போல் பதவிகள் .
அதை வைத்துக் கொண்டு; மூத்தவர்களை நையாண்டி பண்ணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
விரட்டப்பட்டுத் துரத்தப்பட்டவர்களின் கூடாக நமது கூடாரம் மாறி விடக்கூடாது.