வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் நேற்று (09) பட்டப்பகல் நேரத்தில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று பாலைநகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அறுகிலுள்ள அவர்களுடைய சகோதரியின் வீட்டுக்குச் சென்று மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நகைகள், ஐ பேட் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர்.
இதனைக் கண்டு கொண்ட வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.