கலாநிதி பிர்தௌஸ் சத்தார் எழுதிய கிழக்கிலங்கை தமிழ் நாவல்கள் ஆய்வுநூல்; அரங்கேற்றம்.

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனையைச் சேர்ந்த கலாநிதி பிர்தௌஸ் சத்தார் எழுதிய “கிழக்கிலங்கை தமிழ் நாவல்கள்”ஆய்வுநூல்; அரங்கேற்றம் அதிபர் மர்ஹ_ம் ஏ.ஆர்.நிஃமத்துல்லா (கவிஞர்அறநிலா) நினைவரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (2019-06-23ஆம் திகதி மாலை3.30 மணிக்கு மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் பேராசிரியர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் கலந்து கொள்கின்றார்.முதன்மை அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்,தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம்.மஸாஹிர் ஆகியோரும்,கௌரவ அதிதிகளாக எழுத்தாளர் உமாவரதராஜன்,கவிஞர்களான சோலைக்கிளி,மருதமுனை ஹஸன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நூல் மீதான உரைகளை பேராசிரியர் செ.யோகராசா,பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,கலாநிதி கனீபா இஸ்மாயில் ஆய்வாளர் அப்துல் றஸாக் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.நிகழ்ச்சிகளை கவிஞர் விஜிலி தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -