சிலோன் மீடியா போரம் ஏற்பாட்டில் "மண்வாசனை" நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நேற்று (08) சனிக்கிழமை மத்திய முகாம் மஹ்ரூப் தோட்டத்தில் வாய்க்கால் குளியலுடன் கூடிய மண்வாசனையாக சிறப்பாக இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஜபீர் ஆகியோரின் நெறிப்படுத்தலில் போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வி.நவாஸ், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிப் பிரிவு உதவிப் பணிப்பாளர் சீ.வி.எம்.சியாம், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம். அஸ்லம் சஜா, கனி இன்ஜினியரிங் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிசாத் உள்ளிட்ட போரத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு நாவிதன்வெளி, சென்றல் கேம்ப் பிரதேச ஊடகவியலாளர்களாக கடமையாற்றுகின்ற சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீட், செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், எம்.எம். ஜபீர் ஆகியோர் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.வி.நவாஸினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் பிரதேச சபைஉறுப்பினர் எம்.வி.நவாஸ் சிலோன் மீடியா போரத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.