இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை அறிந்து கொள்வதற்கான விசேட பரீட்சை ஒன்று நேற்று (15) கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட இப்பரீட்சையை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் தேசிய ரீதியாக புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறுவது போன்று நடாத்தியது.
குறித்த பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதோடு பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணியில் வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.