எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தாலும் அபிவிருத்திகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம் காதர் மஸ்தான் எம்.பி.


ன்னி மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் நான் மட்டுமே இன்று எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கிறேன். எதிர்க்கட்சி என்பது எனது அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஒரு போதும் தடையாக இருக்காது என நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

பிரதி அமைச்சு பதவி ஒன்றை நான் வகித்த காலத்தில் இனம் மதம் கடந்து பல மில்லியன் ரூபா வேலைத் திட்டங்களை எனது மக்களுக்காக செய்திருக்கின்றேன். தற்போதும் கூட மக்களிற்கான அபிவிருத்தி பணிகளை ஏதோ ஒரு விதத்தில் முன்னெடுத்து தான் வருகிறோம். நாம் எப்போதும் இன மதம் அரசியல் கட்சி என்ற எல்லைக்கு அப்பால் நின்று மனித நேயமிக்க சேவைகளை நாம் ஆற்றுகின்றோம் என்பதை மனசாட்சியுள்ள எவரும் மறுதலித்துவிட முடியாது. கடந்த எங்களது அரசாங்கத்தில் எமது மக்களுக்காக நாங்கள் 250 மில்லியன் ரூபாய்களை மக்களிடம் அபிவிருத்தியாக கொண்டு வந்த போது அதனை தடுத்து நிறுத்தி இன்புற்றவர்களையும் எங்களது அரசியல் கழத்தில் சந்திக்கத்தான் செய்தோம். எல்லா வகையான சதியாட்டங்களையும் முறியடித்து எங்களது பயணத்தை தொடர்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.
நேற்று வவுனியா தோணிக்கல் ஐக்கியம் விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலே பாராளுமன்ற உறுப்பினர் இக் கருத்துக்களை தெரிவித்தார்.இவர் மேலும் தெரிவிக்கையில்,
விளையாட்டுக்கள் இளைஞர்களின் உடல் உள வலிமைக்கு அடிகோலும் அதேவேளை ஆரோக்கியம் மிக்கதும் சிந்தனை மிக்கதுமான சமூகத்தை உருவாக்குகின்றது. இவ்வாறான இளைஞர்களே சர்வதேச அரசியலின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கௌரவ காதர் மஸ்தான் தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் வட்டார இணைப்பாளர் திரு.கேதீஸ்வரன் மற்றும் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு வீரர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -