கல்முனை பிரதேச செயலக விவகாரம் -ஒரு மாதத்திற்குள் தீர்வு - ஞானசார தேரர் (வீடியோ

பாறுக் ஷிஹான்-

ல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு ஒரு மாதம் அவகாசம் தாருங்கள் தீர்வை பெற்றுத்தருவேன் என பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேட்டுள்ளார்.

தமிழ் மக்களின் கோரிக்கைக்கு தீர்வுகாணும் முகமாக கல்முனை பகுதிக்கு இன்று(22) விஜயம் மேற்கொண்டு உண்ணாவிரதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது கருத்தில்

இந்த பிரச்சினை 5 நாளிலும் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி என்னால் பெற்று தர முடியும். ஆனால் விளைவுகள் மோசமாக இருக்கும். நிதானமாக இந்த நடவடிக்கையை செயற்படுத்த எனக்கு ஒரு மாதம் அவகாசம் தாருங்கள். அதற்குள் இதனை செய்து தருவேன்.பல்வேறு மட்டங்களில் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது .எங்களினால் அந்த பேச்சு வார்த்தை ஆரோக்கியமாக முற்று பெரும் என நம்புகின்றேன்.இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம்.எனவே தான் எமது அரசியல்வாதிகளின் இருவேடங்களை களைந்து நாம் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் நாம் செயற்படுவோம். ஒரே நாட்டின் தாய் பிள்ளைகளை போல நாம் செயற்பட முன் வர வேண்டும்.விரைவில் இந்த பிரச்சினையை முடித்து பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன் என்கின்ற அந்த செய்தி மிக விரைவில் உங்களுக்கு கிடைக்கும் என்றார்.இதன் போது பலத்த கரையோசம் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்
கலகொட அத்தே ஞானசார தேரர் தண்ணீர் அருந்த வைத்து நிறைவிற்கு கொண்டு வந்தார்.

கடந்த காலங்களில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் போராட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது குறித்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள போதிலும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தான் தொடர்ந்தும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஏனைய நால்வரும் தாமும் நீராகாரம் மட்டும் அருந்தி தொடர்ந்தும் இதே இடத்தில் தமது போராட்டத்தை அடையாள உண்ணாவிரத போராட்டமாக தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்

மேலும் இந்தபோராட்டம் சுழற்சி முறையிலான போராட்டமாக நடைபெறும் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்முனை வடக்கு தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த 6 நாட்களாக பௌத்ததேர் உட்பட 5 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -