காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.யூ.உதய ஸ்ரீதர் தலைமையில் புதன்கிழமை (12) காத்தான்குடி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இனங்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் மூவின ஊழியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் ஆரம்பமான பெருநாள் நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு.எம்.உதயகுமார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியதுடன் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி) சிறப்புரையாற்றினார்.
இந் நிகழ்வில் சர்வமத ஒன்றியத்தின் மத குருமார்கள் மற்றும் சமூக,அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.