தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களும் வியாபாரம் செய்ய முடியும் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு


ஐ. ஏ. காதிர் கான்-
வென்னப்புவ பிரதேச சபையின் கீழ் இயங்கும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதி வழங்குமாறு, மாறவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதித்து, வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரினால், கடந்த (24) திங்கட்கிழமை அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இது தொடர்பில் (28) வெள்ளிக்கிழமை வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரிடம் மாறவில நீதவான் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், அனைத்துத் தரப்பினருக்கும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து, இப்பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொதுச் சந்தைப் பகுதிக்கு வருவதற்கு, வியாபார சமூகமும் ஏனைய மக்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில், இப்பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கையை எடுக்க நேரிட்டதாக, பிரதேச சபைத் தலைவர் 2019.06.24 ஆம் திகதி இடப்பட்ட குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -