கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபையிர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி


நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட அனைவரும் பிரார்த்திப்போம்.

(எஸ்.அஷ்ரப்கான்)
னவாத, மதவாத கோசங்கள் மேலெழுந்துள்ள இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்களாகிய நாம் அமைதியாகவும் பொறுமையுடனும், செயற்பட்டு இப்புனிதமான பெருநாள் தினத்தில் எமது நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட அனைவரும் இரு கரமேந்தி பிரார்த்திக்குமாறும், நாட்டின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்காக, சகலரும் அர்ப்பனிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபையிர் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்…

சர்வதேசத்தின் தேவைகளும், தலையீடுகளும் நமது நாட்டின் மீது அதிகரித்துக் காணப்படும் இக்காலகட்டத்தில் வெளிநாட்டு சக்திகளின் பின்னனியிலுள்ள, சில இனவாதக் குழுக்கள் எமது நாட்டில் ஒற்றுமையாக வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி நாட்டில் அமைதியற்ற சூழலை உருவாக்க முயற்சிக்கின்றன, இந்தவிடயத்தில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் அவதானத்துடனும், பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.
புனித ரமழான் மாதத்தில் இறையச்சத்துடன் நோன்பு நோற்று ஆன்மீக மேம்பாட்டிக்காக வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இஸ்லாமியச் சகோதரர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகின்றேன்.
அண்மையில் நமது நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் அகதி வாழ்வு நடத்துகின்ற மக்களுக்கு நிம்மதியான வாழ்வு மலர்வதற்கும், குறிப்பாக, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் முஸ்லிம் சமூகம் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இப்பெருநாள் தினத்தைக் கொண்டாடி மகிழவும் இப்புனிதத் திருநாளில் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

மலர்ந்திருக்கும் இந்த ஈகைத் திருநாளில் பல்லின சமூகத்தில் வாழும் நாம் சகோதர சமூகத்திற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் எமது பெருநாள் கொண்டாட்டங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் நாம் முன்மாதிரியான சமூகம் என்பதை நிரூபித்து, எமது அமைதியான பெருநாள் கொண்டாட்டத்தில் ஏனைய சகோதர இன மக்களையும் இனைத்து சகோதர வாஞ்சையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நமது அன்றாட செயற்பாடுகளை உளத்தூய்மையோடும் அல்லாஹ்வின் அருளுக்குரியதாகவும், தியாகத்துடனும் மேற்கொள்ளும் போதுதான் நல்லெண்ணத்தின் பேரிலான வெற்றியோ ஈடேற்றமோ எய்த முடியும். இதன் ஊடாகவேதான் நாட்டின் இன ஐக்கியத்தையும், சமாதானத்தையும் உருவாக்க முடியும்.
அவ்வாறு எமது நாட்டில் உருவாக்கப்படுகின்ற சமாதானத்திற்கும், ஐக்கியத்திற்கும் முஸ்லிம்களாகிய எமது பங்கு பிரதானமானதாக இருக்க வேண்டும். எம்மிடையே காணப்படும் இன, மத, வேற்றுமைகளைக் களைந்து பயன் தரும் வகையில் சமூக வாழ்வில் நம்மை இணைத்துக் கொண்டு நற்பேற்றினை அடைவோம்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய அழகிய வழிமுறையில் இப்பொருநாள் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும் எனவும் அவர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -