அஸ்லம் எஸ்.மெளலானா-
கல்முனை மாநகர சபையின் ஒருங்கிணைப்பில் கல்முனை வர்த்தகர் சங்கம், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இன ஐக்கியத்திற்கான பொஷன் விழா இன்று (16) மாலை கல்முனை மாநகர ஐக்கிய சதுக்கத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த முதலிகே, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி, கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கனேஷ், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா ஆகியோருடன் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பல்லின சமய, சமூகப் பெரியார்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றிருத்தனர்.
கல்முனை வர்த்தகர் சங்கத்தின் ஆலோசகர் ரிஷாத் ஷரீப் நன்றியுரை நிகழ்த்தினார், கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாறக் ஆகியோர் நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தனர்.