இலங்கைதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப் பெற்ற வவுனியா நகரத்தின் கண்ணே ஈழத்தின் ஆறாவது ஈஸ்வர தலமாக போற்றுவதற்கு பெருமை வாய்ந்ததும்,காஞ்சி காமகோடி பீடகுருவருள்பொருந்தியதுமான கோவில்க்குளம்திவ்வியஷேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை ஈந்தருளும் அருள்மிகு அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் செய்த பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவு செய்யும் தருணத்தில் வேதாகம முறைப்படி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
https://www.youtube.com/watch?v=lSh4vdNpAfk&t=54s
மேற்படி பாலஸ்தான மகா கும்பாபிஷேகம் "சாகித்திய சிரோன்மணி, நயினை குருமணி”சிவஸ்ரீ. வை. மு.ப.முத்துக்குமாரசாமி குருக்கள்
(ஆதீன பிரதமகுரு, ஸ்ரீ நாகபூஷணி அம்மன்கோவில், நயினாதீவு - வடகோவை)
மற்றும் " வேதாகம கிரியா கலாநிதி”சக்தி உபாசகர்சிவஸ்ரீ. சதா சங்கரதாஸ் குருக்கள்(ஆலய பிரதம குருமணிகள்: குறிகட்டுவான் ஸ்ரீ மனோண்மணி அம்மன் ஆலயம்பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்.) ஆகியோரது தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட த்தில் நடைபெறுகின்ற
இந்துமத கலாசார நிகழ்வுகள்.
ஆன்மீக நிகழ்வுகள்.
ஆலயங்கள்.
உற்சவங்கள்
விழாக்கள்