கொட்டகலை வேட்டுடையார் காளியம்மன் ஆலய மண்டலபூர்த்தி விழாவும் பால் குட பவனியும் நேற்று சிறப்பாக நடைபெற்றன.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
நுவரெலியா கொட்டகலை நகரத்தில் எழுந்தருளியுள்ள அருள் மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலயத்தின் விகாரி வருட ஆனி மாதம் 14ம் நாள் ஆலய மஹா கும்பாபிசேக மண்டல பூர்திவிழாவும் பால்குட பவனியும் நேற்று சிறப்பாக நடைபெற்றன.
இவ்வாலயத்தின் கும்பாபிசேக பெழுவிழா கடந்த 10.05.2019 இவ்வாலயத்தின் நடைபெற்று, நேற்று (29) காலை 09 மணிக்கு கொட்டகலை டிரேட்டன் தோட்ட ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால் குட பவனி ஆரம்பமாகி ஆலயத்தினை வந்தடைந்து அதனை தொடர்ந்து அம்பாளுக்கு பாலாபிசேகம் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த பால் குட பவனியில் மேள தாள வாத்தியங்கள் இசை முழங்க கலை கலாசார நிகழ்வுகளுடன் கரகம் காவடி பரவைக்காவாடி ஆகியனவும் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து 1009 சங்காபிசேகம் பூஜை இடம்பெற்று,வேட்டை திருவிழா,மகேஸ்வர பூஜை ஆகியனவும் இடம்பெற்று தேர் வெளி வீதி உலா, நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மகேஸ்வர பூஜை ஆகியன நடைப்பெற்று பக்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.
தற்புருச சிவாச்சாரியார் பிரம்ம ஸ்ரீ ஸ்கந்தராஜ குருக்கள் அவர்கள் பூஜை வழிபாடுகளை நடத்தியதுடன் இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -