ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த முன்பள்ளி பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கான அதிகரிக்கப்பட்ட 1000 ரூபா வழங்கலும் அடையாள அட்டை வழங்கலும் நிகழ்வு இன்று (02) ஞாயிற்றுக் கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்றது.
மாதாந்த தொகை 3000 ரூபா காணப்பட்ட நிலையில் 1000 ரூபா அதிகரிப்புத் தொகையால் தற்போது மாதம் 4000 ரூபா வழங்கப்படவுள்ளது.
.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 1711 முன்பள்ளி பாலர் பாடசாலைகளை கொண்ட சுமார் 3592 முன்பள்ளி ஆசிரியைகளுக்கே இவ்வாறு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு தொகை வழங்கி வைக்கப்பட்டன.
இவ் நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்தன, மாகாண பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டா, முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமான்லெப்பை உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.