'சகோதர பாடசாலை" ஐந்துநாள் வேலைத்திட்டம்!

ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
னாதிபதி செயலகத்தின்கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலத்தின் ஏற்பாட்டில் இம்முறை மட்டக்களப்பில் முதற்தடவையாக நடாத்தப்பட்ட'சகோதர பாடசாலை" ஐந்துநாள் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில்; நடைபெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி கல்வி வலயத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளும் திருகோணமலையிலுள்ள சிங்கள பாடசாலைகளும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முஸ்லிம் பாடசாலை மாணவர்களும் பங்கேற்றனர்.

நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் சினேகபூர்வமாகச் செயற்பட்டதனால் பிரியாவிடையின்போது கண்ணீர் மல்கியதை அவதானிக்க முடிந்தது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலத்தின் கல்விப்பிரிவுப்பணிப்பாளர் ஜேகே. ராஜபக்ஷ தலைமையில் மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் சமூக ஒருங்கிணைப்பு சமாதான விழுமியங்கள் விடய உதவிக்கல்விப்பணிப்பாளருமான எஸ். அரிதரனின் நெறிப்படுத்தலில் நிகழ்வு நடைபெற்றது.
இதில் செயல்திட்ட பணிப்பாளரும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏஎஸ்ம். யஸ்ரி மற்றும் கல்வியதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்கால சந்ததியான மாணவர்கள் மத்தியில் சமூக ஒருங்கிணைவு, சமாதான சகவாழ்வு,
மத நல்லிணக்கம் மற்றும் ஏனைய மத, கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை அறிதலும் மதிப்பளித்தலும் போன்ற இன்னோரன்ன நற்பண்புகளை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மட்ட 22 ஆவது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -