வாரியப்பொல - மிரிஹம்பிட்டிய பள்ளிவாசலுக்கு அத்துமீறல் ; பிரதேசத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு


ஐ. ஏ. காதிர் கான்-
வாரியப்பொல - மிரிஹம்பிட்டிய பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து, அப்பிரதேசத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வாரியப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஹம்பிட்டியவில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு (17) திங்கட்கிழமை மாலை திடீரென வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு சில வாலிபர்கள், பள்ளிவாசல் மேல் மாடிக்குச் சென்று, ஹிப்ழ் மத்ரஸா நடைபெறும் இடத்தை நோட்டமிட்டுள்ளனர். அத்துடன், இது அடிப்படைவாதம் போதிக்கப்படும் இடம் எனக் காரசாரமாய்க் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், அப்பிரதேச முஸ்லிம்களால் கேள்வி எழுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான கோழி இறைச்சிக் கடை ஒன்றின் மீது அங்கு வந்த பெரும்பான்மை இன வாலிபர்கள் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இத்தாக்குதல் காரணமாக, அங்கிருந்த முஸ்லிம் நபர் ஒருவர் காயமடைந்து வாரியப்பொல வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாரியப்பொல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை, சந்தேகத்தின் பேரில் வாரியப்பொல பொலிஸார் கைது செய்து, தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -