சம்மாந்துறை பிரதேச சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு

எம்.எம்.ஜபீர்-
ஜனாதிபதியின் வழிகாட்டில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வும், போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைவாக சம்மாந்துறை அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாடின் பணிப்புரைக்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.அச்சி முஹம்மட் தலைமையில் நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை அம்பாரை மாவட்ட உத்தியோகத்தர் எம்.எம்.ஜீ.வீ.எம்.றஸாட் வளவாளராக கலந்து கொண்டு போதைப் பொருள் பாவிப்பதினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடைசெய்வது தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், அல்-அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.அப்துல் றகீம், அல்-அஸ்ஹர் வித்தியாலய பிரதி அதிபர் எஸ்.எல்.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.தஸ்லிமா, ஆசிரியர்கள், சமூக நலன் மாணவர் அமைப்பு உறுப்பினர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -