இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நேரடியாக ஈடுப்படவில்லை

டந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நேரடியாக ஈடுப்படவில்லை என புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத்தெரிவித்துள்ளதாக கொழும்பு கெசற் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையில் உள்ள உள்ளூர் குழுவொன்றினால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக அந்த புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலைக் குண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இங்கிருந்த இந்தோனேசிய வழியாக அனுப்பப்பட்ட காணொளிகளே ஐ.எஸ் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே இலங்கை தாக்குதல்களுக்கு ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி உரிமை கோரியிருந்தார்.

இருப்பினும் இலங்கையில் உள்ள உள்ளூர் பயங்கரவாத வலையமைப்பு அல் பாக்தாதி தலைமையில் செயற்படவில்லையெனவும் ஆனால், ஐ.எஸ். நேரடியாக தொடர்புகளைப் பேணாத போதிலும் ஒரு சில தொடர்புகளை பேணியிருக்கலாமெனவும்,அவர்கள் உண்மையான ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர்கள் அல்லவெனவும் அந்த புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஹோட்டல் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாக தேசிய தௌவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்,தாக்குதல்களில் கொல்லப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளில் தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் என்பவரும் ஒருவர் எனவும் அவர் வீடியோ காணொளிகள் மற்றும் ஏனைய பிரச்சார உத்திகள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை ஊக்குவித்துள்ளார்.வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -