உண்ணாவிரதத்தில் யாராவது உயிர்நீத்தால் அரசே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்!
காரைதீவில் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் அரியநேத்திரன்!
காரைதீவு நிருபர் சகா-அடுத்துவரும் அமைச்சரவைக்கூட்டத்தில் அதாவது எதிர்வரும் 25ஆம் திகதி தவறினால் ஜூலை 2ஆம் திகதி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித்தருவதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க எமது தலைமையிடம் வாக்குறுதிஅளித்துள்ளார்.
இவ்வாறு கல்முனையில்இடம்பெற்றுவரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவுவழங்கும்வகையில் காரைதீவில் இடம்பெற்றுவரும் சுழற்சிமுறைஉண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொள்ள (20) வியாழக்கிழமைவந்த மட்டு.மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
எமது தமிழரசுக்கட்சித்தலைவர்மாவை சேனாதிராஜா மற்றும் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யுh.சிறிநேசன் ஆகியோர் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில்விக்கரமசிங்கவைச் சந்தித்து கல்முனை விவகாரத்தை பேசியுள்ளனர்.
அங்கு அவர் மேற்படி இருதிகதிகளில் ஒன்றில் இத்தரமுயர்த்தல் விடயத்தை மேற்கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளார்.
எந்தத்திகதியில் இதனைச்செய்யலாம் என்றுகூடத் தெரியாத பிரதமரின் கூற்றை நம்புவதா? நம்பாமல் விடுவதா? என்பதற்கு அப்பால் அமைச்சரவையினூடாடகத்ததான் அது சாத்தியம் என்பதை நாமனைவரும் அறிவோம்.
நிற்க நேற்று பொதுநிருவாக அமைச்சர் வஜிரஅபேவர்த்தன யாழ்ப்பாணத்திற்கச்சென்றபோது எமது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதே கேள்வipள அவரிடம்கேட்டதற்கு குறித்த பிரதேசசெயலகத்திற்கான எல்வை நிருணயம் இன்னும் பூரணமாக செய்துமுடிக்கப்படவில்லைஎனவே இருசமுகங்களும் முரண்படாதவகையில் இணக்கப்பாட்டுடன் அதனைச்செய்து பின்னர் தரமுயர்த்தலைச்செய்யலாம் என்று பதிலளித்துள்ளார்.
மொத்தத்தில் பிரதமரின் பதிலும் அமைச்சரின் பதிலும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துவதாகஉள்ளது.
ஒரு பக்கம் முஸ்லிம்களைப் பகைத்துக்கொள்ளாமலும்மறுபக்கம் தமிழ்மக்களை அரவணைத்தக்கொண்டு அரசியல் செய்யமுற்படுவதைக் காணலாம்.
இவ்வுண்ணாவிரதப்போராட்டத்தில் யாராவது உயிரைத்துறக்கநேரிட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும். எமக்கான தீர்வு கிடைக்கும்வரைபோராட்டம் தொடரும்.
த.தே.கூட்டமைப்பும் சரி அதற்கும் முன்பு த.வி.கூட்டணியும் சரிபாராளுமன்றில் எதிர்க்கட்சிகளாகவே இருந்துவந்துள்ளன. ஆனால் 2015ற்குப் பிற்பாடு அரசியல் ரீதியாக ஒருவகையிலான நல்லிணக்க அரசியலை த.தே.கூட்டமைப்பு செய்துவருகிறது.
அன்றுதொட்டு இன்றுவரைகல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரயுர்த்தல்விவகாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றோம்.
பல தடவைகள் பிரதமமந்திரியைச்சந்தித்துப் பேசியுள்ளோம். வாக்குறறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.
ஹரீஸ் என்கிற முஸ்லிம் அரசியல்வாதியால் இவ்விவகாரம் இழுத்தடிக்கப்பட்டுவருவதனை பாராளுமன்றில் 11வருடங்கள் எம்.பி.யாக இருந்தவன் என்றவகையில் நான் நன்கு அறிவேன்.
இதனிடையே எமது பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பாராளுமன்றில் பேசுகையில் இத்தரமுயர்த்தலைச்செய்யாவிடின் அரசுக்கான எமது ஆதரவை விலக்கிக்கொள்ளநேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது எமது பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் சுமந்திரன் எம்பி சகிதம் கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்திகொண்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம். எதற்கும் நல்லமுடிவை எதிர்பார்ப்போம்.
என்றார்.